உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மாதாந்திர பஸ் பாஸ் வரும் 23ம் தேதி வரை பெறலாம்: எம்.டி.சி., அறிவிப்பு

மாதாந்திர பஸ் பாஸ் வரும் 23ம் தேதி வரை பெறலாம்: எம்.டி.சி., அறிவிப்பு

சென்னை, மாதாந்திர பஸ் பாஸ் வரும் 23ம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மாநகர போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகர போக்குவரத்து கழகத்தில், வரும் 16ம் முதல் பிப்., 15ம் தேதி வரையில் செல்லதக்க 1000 ரூபாய் மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை, மாணவர்கள் சலுகை பயண அட்டை மாதந்தோறும் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையொட்டி, இன்று முதல் 17ம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக, மாதந்திர பஸ் பாஸ், மாணவர் சலுகை பஸ் பாஸ் ஆகியவை வரும் 23ம் தேதியில் நீட்டிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும். எனவே, பயணியர் இதனை பயன்படுத்தி, அனைத்து மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் வழக்கம் போல் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை