| ADDED : ஜூலை 17, 2021 06:58 PM
வீட்டு தரைக்கு கிரானைட், மார்பிள்ஸ் இருந்தாலும் டைல்ஸ்களை பலர் விரும்பி அமைக்கிறார்கள். விலை குறைவு, கையாள்வதற்கு எளிது, பல விதமான டிசைன்கள் என பல அம்சங்களை 'டைல்ஸ்'கள் கொண்டிருப்பதால் தான் இதற்கு இன்று அதிக வரவேற்பு உள்ளது.டைல்ஸ்களில் செராமிக், பாலியஸ்டர், கிளாஸ்ட் என மூன்று வகை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நீர் உறிஞ்சும் தன்மைக்கு ஏற்ப டைல்ஸ் தரம், உழைக்கும் தன்மை, ஆயுட்காலம் தீர்மானிக்கப்படும். 25 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள செராமிக் டைல்ஸ் வீட்டு உள் சுவர்களுக்கு பயன்படுத்துவர். இந்த டைல்ஸ்களில் அதிக கீறல் விழும் என்பதால் தரைக்கு ஏற்றதல்ல. பாலியஸ்டர் வகை டைல்ஸில் நீர் உறிஞ்சும் தன்மை குறைவு என்பதால் தரைக்கு ஏற்றது. கடினத்தன்மை, வெப்பம் தாங்குவதால் நீண்ட நாள் உழைக்கும். கிளாஸ்ட் விட்ரோலைட் டைல்ஸ் பாலியஸ்டரை விட அதிக டிசைன், கலர், கிராக் விழாத தன்மையில் கிடைக்கும். உழைக்கும் என்பதால் விலை அதிகம்.பாலியஸ்டர், கிளாஸ்ட் டைல்ஸ் சமையலறை, வரவேற்பறையில் பயன்படுத்தலாம். சமையலறை, டைனிங் பகுதிக்கு செராமிக் ஆன்டி ஸ்கிட் டைல்ஸ் உள்ளன. வீடு அமைப்பு, தேவை, செலவிற்கு ஏற்ப டைல்ஸ் அமைக்கலாம். வீட்டு வரவேற்பு மற்றும் படுக்கை அறைக்கு அடி அளவில் டைல்ஸ் பயன்படுத்துவர். வீட்டு சுவர் நிறத்தில் டைல்ஸ் அமைத்தால் அழகிய தோற்றம் தரும்.