உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அரசு பேருந்து டயர் பஞ்சரால் பயணியர் ஒரு மணி நேரம் காத்திருப்பு

அரசு பேருந்து டயர் பஞ்சரால் பயணியர் ஒரு மணி நேரம் காத்திருப்பு

உத்திரமேரூர், உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு, தடம் எண்டி34 பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து ஒரு நாளுக்கு 12 முறை இயக்கப்படுகிறது.இப்பேருந்தை பயன்படுத்தி, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தோர் காஞ்சிபுரத்திற்கு தினமும் சென்று வருகின்றனர்.அதேபோல, ஓரிக்கை, களக்காட்டூர், ஆர்ப்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர் தினமும், உத்திரமேரூருக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், உத்திரமேரூர் பணிமனைக்கு உட்பட்ட, இப்பேருந்து நேற்று வழக்கம்போல இயக்கப்பட்டது.அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து, உத்திரமேரூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து, நேற்று பிற்பகல் 12:10 அளவில் மணல்மேடு அருகே செல்லும்போது, முன்பக்க டயர் பஞ்சர் ஆனது.அதை தொடர்ந்து, பேருந்து ஓரமாக நிறுத்தப்பட்டது. பேருந்தில் இருந்த பயணியரை நடத்துனர் இறங்க கூறினார்.பின், பயணியர் அதே பகுதியில் மாற்று பேருந்துக்காக ஒரு மணி நேரம் காத்திருந்தனர். பின், மாற்று பேருந்தில், பயணியர் ஏற்றப்பட்டு உத்திரமேரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை