த.வெ.க.,வினரின் கொடி கம்பம் அகற்றம்
சென்னை, ராயபுரம் காந்தி நகர் பிரதான சாலை உள்ளது. த.வெ.க., 59வது வார்டு பொருளாளர் ஸ்டீபன், மன்றத் தலைவர் பாலச்சந்தர் ஆகியோர், அனுமதியின்றி பாய்ஸ் கிளப் அருகே நேற்று முன்தினம் கொடி கம்பம் அமைத்தனர்.இதை அறிந்த மாநகராட்சி பொறியாளர் கார்த்தி, அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி, கொடி கம்பத்தை அகற்றினர். உடனே, அருகே உள்ள தி.மு.க.,வின் கொடி கம்பத்தையும் அகற்ற வேண்டும் என, த.வெ.க.,வினர் போர்க்கொடி துாக்கினர். இதனால், தி.மு.க.,வின் கொடி கம்பமும் அகற்றப்பட்டது.