உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலர், 'டாக்டர்' சரவணன் அறிக்கை: மதுரைக்கு சமீபத்தில் வந்த முதல்வர் ஸ்டாலின், 'கடந்த நாலரை ஆண்டு கால, தி.மு.க., ஆட்சியில், 11.83 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்த்து, 34 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்' என, தெரிவித்துள்ளார். ஆனால், நிஜத்தில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீடுகளே தமிழகத்திற்கு வந்துள்ளன. ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பல்வேறு இடையூறுகள் இருப்பதால், முதலீட்டாளர்கள் வர மறுக்கின்றனர். 'தமிழகத்திற்கு வரும் முதலீட்டாளர்களை மிரட்டி, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்கு தள்ளிட்டு போயிடு றாங்க'ன்னு, தி.மு.க.,வினர் சால்ஜாப்பு சொன்னாலும் சொல்லுவாங்க!அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: தமிழகத்தின், 'டெல்டா' உட்பட பல்வேறு மாவட்டங்களில், பயிர்களின் வளர்ச்சிக்கு அவசியமான யூரியா உரத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், யூரியா உரம் போதுமான அளவில் இல்லை. உரத் தட்டுப்பாட்டை போக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா சாகுபடிக்கு, கடந்த ஜூன் 12ல், மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வச்சப்பவே, போதுமான உரம் கையிருப்புக்கு தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்காதது ஏன்? அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி: அ.தி.மு.க., ஆட்சியில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவ - மாணவியருக்கு இலவச, 'லேப்டாப்' வழங்கப்பட்டன. 2021ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த நான்கரை ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கல்லுாரிகளில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வரும், மாணவ -மாணவியர், 10 லட்சம் பேருக்கு, இம்மாத இறுதியில் லேப்டாப் கொடுப்பதாக, தி.மு.க., அரசு அறிவித்துள்ளது. இது, சட்டசபை தேர்தலில், அவர்களின் ஓட்டு வங்கியை குறி வைத்து நடத்தப்படும் நுாதன ஓட்டு திருட்டு. தேர்தல் முடிஞ்சதும், இலவச லேப்டாப் திட்டத்துக்கு மூடுவிழா நடத்தவும் வாய்ப்பிருக்கு! தமிழக, பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கோவை, ஒண்டிப்புதுாரில் உள்ள அரசு பள்ளியில், பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அவை பல குறைபாடுகளுடன், தரம் குறைந்து இருந்துள்ளன. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற கொள்கையோடு, தி.மு.க., அரசு, ஊழலில் ஊறி திளைத்து கொண்டிருக்கிறது. 'மறுபடியும் ஆட்சிக்கு வர முடியாது'ன்னு நினைச்சி, புகுந்து விளையாடுறாங்களோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை