உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மெத் ஆம்பெட்டமைன் விற்ற இருவர் சிக்கினர்

மெத் ஆம்பெட்டமைன் விற்ற இருவர் சிக்கினர்

கோயம்பேடு, கோயம்பேடு காவல் நிலைய எல்லையில், போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோயம்பேடு எஸ்டேட் குட்டை, என்.டி.படேல் சாலையில், போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அங்கு, சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரை மடக்கி விசாரித்தனர். அவரை சோதனை செய்த போது, மெத் ஆம்பெட்டமைன் என்ற போதை பொருள் இருந்தது.தொடர் விசாரணையில், பிடிபட்ட நபர், நெற்குன்றத்தை சேர்ந்த தனஞ்செழியன், 43, என, தெரியவந்தது. அவரிடம் இருந்து, 51 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.தனஞ்செழியன் அளித்த தகவலின்படி, நெற்குன்றத்தை சேர்ந்த பெரியசாமி, 26, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தனஞ்செழியன் மீது, 15 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ