உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / போதை பொருள் வைத்திருந்த இருவர் கைது 

போதை பொருள் வைத்திருந்த இருவர் கைது 

திருவொற்றியூர், போதை பொருள் வைத்திருந்த இருவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில், போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக, கூடுதல் கமிஷனர் அஷ்ரா கார்க்கி உத்தரவின் படி, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மெத்தம் பெட்டமைன் எனும் போதை பொருள் வைத்திருந்த, கொடுங்கையூரைச் சேர்ந்த ஷேக் தாவுது, 42, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அன்சர்ஜிலானி, 51, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, இரண்டு கிலோ மெத்தம் பெட்டமைன் போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கைதானவர்களை வண்ணாரப் பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில், ஆய்வாளர் புஹாரி தலைமையிலான போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை