கூடுவாஞ்சேரியில் மகளிர் பேருந்து பழுது
கூடுவாஞ்சேரி:கொட்டமேட்டில் இருந்து, தாம்பரம் நோக்கி தடம் எண் 55 எப் அரசு மகளிர் கட்டணமில்லா பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது .ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண் பயணியர் இருந்தனர். பேருந்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து, தாம்பரம் நோக்கி செல்லும் போது , நகராட்சி அலுவலகம் எதிரில் திடீரென்று டயர் வெடித்து பழுதானது. தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தி பயணியரை இறக்கி விட்டார். பயணியர் மாற்று பேருந்து வாயிலாக சென்றனர். இதனால் பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.