உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மகளிர் உலகக்கோப்பை: இந்தியா முதல் முறை சாம்பியன்

மகளிர் உலகக்கோப்பை: இந்தியா முதல் முறை சாம்பியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நவிமும்பை: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bkkcsqnb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, லாரா வால்வார்ட் கேப்டனாக உள்ள வலிமையான தென் ஆப்ரிக்கா அணியை எதிர்த்து விளையாடியது. நவி மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது.இதில், டாஸை வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிரிதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் இறங்கினர். ஆரம்பத்தில் மந்தனா கொஞ்சம் தடுமாறினாலும், பிறகு வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். மறுமுனையில் இளம் வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடினார்.அணியின் ஸ்கோர் 104 ரன்னை எட்டிய போது, ஸ்மிரிதி மந்தனா 45 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷபாலி வர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 87 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24), ஹர்மன்ப்ரீத் கவுர் (20), அமன்ஜோத் கவுர் (12) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். மற்றொருபுறம் கடைசி வரை விளையாடிய தீப்தி சர்மா 58 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன் குவித்தது.தென் ஆப்ரிக்கா தரப்பில் காகா 3 விக்கெட்டுகளும், மலபா, டி கிளெர்க், டிரையன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.298 ரன்னை இலக்காகக் கொண்டு விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ப்ரிட்ஸ் 23 ரன்னிலும், போஸ்ச் ரன் எதுவுமின்றியும், ஆட்டமிழந்தனர்.பேட்டிங்கில் கலக்கிய ஷபாலி வர்மா பந்து வீச்சிலும் கலக்கினார். லுஸை 25 ரன்னிலும், காப்பை 4 ரன்னிலும் அவுட்டாக்கினார்.தென் ஆப்ரிக்கா அணி 45.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுதீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதுவரை ஐ.சி.சி., தொடரில் மூன்றாவது முறை பைனலுக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி, இன்று முதல் கோப்பை வென்று சாதித்தது.இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் ஷபாலி வர்மா சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.பிரதமர் மோடி வாழ்த்து: ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த அற்புதமான வெற்றி. இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்திறன் மிகுந்த திறமை மற்றும் நம்பிக்கையால் குறிக்கப்பட்டது. போட்டி முழுவதும் அணி விதிவிலக்கான குழுப்பணி மற்றும் விடாமுயற்சியைக் காட்டியது. எங்கள் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள். இந்த வரலாற்று வெற்றி எதிர்கால சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

dmsst dreamssports
நவ 03, 2025 14:10

வாழ்த்துக்கள் சகோதரிகளே


Anonymous
நவ 03, 2025 11:17

வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்


Kannan
நவ 03, 2025 07:24

தீப்திக்கு பிளேயர் of தி சீரிஸ் அவார்டு கொடுத்ததால் இருக்கும்.


தியாகு
நவ 03, 2025 07:17

கோப்பை வென்ற மகளிரே, அந்த கோப்பையை பார்த்து பத்திரமாக வைத்துக் கொள்ளவும். இல்லனா கட்டுமர திருட்டு திமுகவினர் உங்களுக்கு தெரியாமல் நீங்கள் எங்குமே நிரூபிக்கமுடியாதபடி அந்த கோப்பையை ஆட்டையை போட்டு பழைய பாத்திர கடையில் அதை விற்றுவிட்டு கட்டுமர திருட்டு திமுகவினர் ஆலையில் இருந்து வரும் சரக்கை வாங்கி குடித்துவிட்டு ரோட்டில் வரும் மகளிரை வம்புக்கு இழுப்பார்கள்.


THIRUNAVUKKARASU SHANMUGARAJ
நவ 03, 2025 07:05

"This victory by the Indian womens cricket team marks a new milestone and will surely inspire the next generation. A truly great team—salute to their spirit, skill, and determination. Wishing them continued success and glory ahead"


THIRUNAVUKKARASU SHANMUGARAJ
நவ 03, 2025 07:03

"This victory by the Indian womens cricket team marks a new milestone and will surely inspire the next generation. A truly great team—salute to their spirit, skill, and determination. Wishing them continued success and glory ahead"


raja
நவ 03, 2025 06:03

உண்மையில் தீப்தி சர்மாவுக்கு தான் ஆட்ட நாயகி விருது வழங்கி இருக்க வேண்டும்...


நிக்கோல்தாம்சன்
நவ 03, 2025 06:02

பாகிஸ்தானிய முஸ்லீம் நக்குவி வர்றான் என்றதும் எடுத்தாங்க பாருங்க சாம்பியன்ஸ்


thulasiraman h
நவ 03, 2025 05:51

மிக்க மகிழ்ச்சி நன்றி


Indhuindian
நவ 03, 2025 04:48

Great feat. BCCI and the Government should accord them the same kind of treatment that is given to Mens team both in terms of recognition and awards.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை