தகவல் சுரங்கம் : முதல் மாவட்டம் எது
தகவல் சுரங்கம்முதல் மாவட்டம் எதுஇந்தியாவில் 2024 டிச. 26 கணக்கின் படி 788 மாவட்டங்கள் உள்ளன. இதில் அதிகபட்சமாக உ.பி.,யில் 75 மாவட்டங்கள் உள்ளன. அடுத்த நான்கு இடங்களில் ம.பி., 55, ராஜஸ்தான் 41, பீஹார் , தமிழகம் தலா 38, மஹாராஷ்டிரா 36 உள்ளன. நாட்டில் முதன்முதலாக உருவாக்கப் பட்ட மாவட்டம் தமிழகத்தின் சேலம். 1792 ஏப். 4ல் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டது. தற்போதைய நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி இருந்தது. அப்போது இதன் பரப்பளவு 7530 சதுர கி.மீ., மாவட்டத்தின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் ரீட் (1792 - 1799) பதவி வகித்தார்.