உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : தண்ணீர் குடிக்காத விலங்கு

தகவல் சுரங்கம் : தண்ணீர் குடிக்காத விலங்கு

தகவல் சுரங்கம்தண்ணீர் குடிக்காத விலங்கு'கோவாலா' என்பது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலுாட்டி வகையை சேர்ந்த விலங்கு. இவை தண்ணீர் குடிப்பதில்லை. தான் வசிக்கும் யூகலிப்டஸ் மரங்களின் இலைகளில் இருந்தே இதை பெறுகின்றன. இதிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள 600 வகை யூகலிப்டஸ் மரங்களில் 50 வகை மரங்களின் இலையை தான் இவை உண்கின்றன. மனிதர்களின் விரல் ரேகையை போலவே, இதற்கு ரேகை இருப்பது இதன் தனிச்சிறப்பு. இதற்கு வால் இல்லை. வட்டமான, பஞ்சு போன்ற காதுகள், கருமையான மூக்குடன் கூடிய பெரிய தலை உள்ளது. இதன் நீளம் 60 - 85 செ.மீ., எடை 4 - 15 கிலோ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை