தகவல் சுரங்கம் : தேசிய கப்பல் படை தினம்
தகவல் சுரங்கம்தேசிய கப்பல் படை தினம்இந்தியா மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. இந்திய கடற்கரையின் நீளம் 7517 கி.மீ. இதனால் கடலோர பாதுகாப்பு முக்கியமானது. நாட்டைஎதிரிகளிடம் இருந்து காப்பதில் முப்படைகளில் ஒன்றான கப்பல் படை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா- - பாக்., இடையே 1971 டிச., 4ல் நடந்த போரில் 'ஆப்பரேஷன் டிரைடன்ட்' பெயரில் இந்திய கப்பல் படை பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது. இதை நினைவுபடுத்தும் விதமாக டிச. 4ல் தேசிய கப்பல் படை தினம் கொண்டாடப்படுகிறது.