உள்ளூர் செய்திகள்

வெண்டைக்காய் பக்கோடா!

தேவையான பொருட்கள்:வெண்டைக்காய் - 100 கிராம்கடலை மாவு - 200 கிராம்அரிசி மாவு - 50 கிராம்வெங்காயம் - 4பச்சை மிளகாய் - 3மிளகாய்துாள், கறிவேப்பிலை, சோம்பு, எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:வெண்டைக்காய், வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். அதில், உப்பு, சோம்பு, மிளகாய்துாள், கருவேப்பிலை கலந்து வதக்கவும். நன்றாக வதங்கிய கலவையுடன், கடலைமாவு, அரிசிமாவுடன் சிறிது தண்ணீரும் சேர்த்து பிசையவும். வாணலியில், எண்ணெய் காய்ந்ததும், வதக்கிய வற்றுடன், மாவு கலவையை சிறிது சிறிதாக பிசறி, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவைமிக்க, 'வெண்டைக்காய் பக்கோடா!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்!- அ.பூங்கோதை, செங்கல்பட்டு.தொடர்புக்கு: 94452 20952


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !