உள்ளூர் செய்திகள்

தொன்மையான கிரேக்கம்!

கி.மு.800-காலகட்டத்திற்கு பிறகு வந்த காலத்தில் கிரேக்க கலாசாரம் புத்துயிர் பெற தொடங்கியது. இந்த கலாசாரம் 500- கால கட்டத்தில் தழைத்தோங்கியது. இதன் பெயர், ஆகெய்யிக் காலம். கிரேக்க ஜனத் தொகை பெருக தொடங்கி பிற நிலங்களோடு தொடர்புகளும் ஏற்படலாயின. கிரேக்ககலை முன்னேற்றமடைந்தது. எழுத்துக் கலை மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டு முன்னேற்றமடைந்தது.முதல் காலனிகள்!கி.மு.1000 ஆண்டிற்கு முன் கிரேக்கத்தின் பிரதான பகுதியிலிருந்து மக்கள் கடல் தாண்டி புதிய நிலப் பகுதிகளை தேடி நகர தொடங்கினர். பஞ்சம், வெள்ளம் பகுதிகளுக்கிடையே போராட்டம் மற்றும் பெருகி வரும் ஜனத்தொகை ஆகிய காரணங்களால் மக்கள் வெளியேற தொடங்கினர்.அப்படி நகர்ந்த மக்கள் குடியேறிய பகுதிகள், காலனிகள் எனப்படும். அவை பின் சுதந்திரமான பகுதிகளாக ஆனது. அவற்றில் முதலாவதாக ஆசியா மைனர் (தற்போதைய டர்கி) கரையோரம் உருவானது ஐயோனியா.மற்றவர்கள் பின்னர் மத்திய தரைக்கடல் பகுதியை சுற்றி குடியேறினர். அது பிரான்ஸ் முதல் கருங்கடல் வரை நடந்தது. இது போன்ற காலனிகள் இயற்கை துறைமுகம், நல்ல விவசாய நிலம் மற்றும் நட்புணர்வான பகுதி ஆகியவை அப்பகுதி மக்கள் இருக்கும் இடங்களில்தான் உருவானது.தானிய வாணிபம்!கிரேக்க நகரங்களால் தங்கள் வளரும் ஜனத்தொகைக்கு ஈடாக தானியங்களை தரமுடியவில்லை. அதனால், தானியங்களில் மிக முக்கியமான இறக்குமதியாக பார்லி இருந்தது. ஏதென்ஸ் தனது தேவைக்கான தானியங்களில் மூன்றில் இரண்டு பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. அவைகளின் இறக்குமதி கிரேக்க காலனிகளிலிருந்து வந்தது.வியாபாரமும், வர்த்தகமும்!வியாபாரம் கிரேக்க நகரங்கள் மற்றும் காலனிகளுக்கிடையே நடந்தது. பீனிஷிய மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வியாபாரமும், வர்த்தகமும் நடந்தது. வணிகர்கள் துறைமுகம் பொருள்களை வாங்குதல், விற்றல் செய்தனர். கிரேக்க காலனிகள்தான் கிரேக்கம் மற்றும் அயல் நிலங்களுக்கிடையேயான வியாபாரத்திற்கு மையப்பகுதியாக இருந்தது.இந்த ஜாடியை அம்பர் என்பர். இரு பிடியுள்ள ஜாடி என்று அர்த்தம். இது கி.மு.560ம் ஆண்டில் பெயிண்ட் செய்யப் பட்டது. அக்காலத்தில் மிகவும் மலைப்பாக பார்க்கப்பட்ட கலை வடிவம் இது.இந்த பானை செய்முறையில் செய்யப்பட்ட குதிரையும் அதில் சவாரி செய்பவருமான சிலையும் கி.மு.600ம் ஆண்டில் கிரேக்கத்தில் உருவாக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !