பீட்ரூட் சர்பத்!
தேவையான பொருட்கள்:பீட்ரூட் - 3சர்க்கரை - 100 கிராம்பால் - தேவையான அளவுஏலக்காய் துாள், தண்ணீர் - சிறிதளவு.செய்முறை:பீட்ரூட்டை தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும். அளவாக தண்ணீர் சேர்த்து, வேக வைக்கவும். வெந்ததும், சர்க்கரை, ஏலக்காய்துாள் சேர்த்து நன்றாக கிளறவும். கெட்டியானதும், இறக்கி ஆற வைத்து, நன்கு மசித்து கண்ணாடி பாட்டிலில் அடைக்கவும். இதில் தேவையான அளவு எடுத்து, பால் கலந்து குளிரூட்டவும். சுவை மிக்க, 'பீட்ரூட் சர்பத்' தயார். வெயில் நேரத்தில் இதமாக பருகலாம்!- எஸ்.ராஜம், திருச்சி.