கற்பூரவல்லி இலை சட்னி!
தேவையான பொருட்கள்:கற்பூரவல்லி இலை - 15பச்சை மிளகாய் - 2புளி, கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு, எண்ணெய் - சிறிதளவுதேங்காய் துருவல், உப்பு - தேவையான அளவு.செய்முறை:எண்ணெயை சூடாக்கி, சுத்தம் செய்த கற்பூரவல்லி இலை, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், புளியை வதக்கி, உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, அதில் சேர்க்கவும். சுவைமிக்க, 'கற்பூரவல்லி இலை சட்னி!' தயார். இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிடலாம். அஜீரணத்தை போக்கும்.- எஸ்.சரஸ்வதி, மதுரை.