ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (7)
ஹலோ... ஸ்டூடன்ட்ஸ்... இத்தனை ஆர்வமாக கற்றுக்கொள்ளும் உங்களை நினைத்தால், எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு!இதுவரை Noun, Verb, Adverb, Pronoun, Adjectives, Prepositions பார்த்துள்ளோம் இல்லையா?Conjunction: இரண்டு வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல்லை ஆங்கிலத்தில் Conjunction என்கிறோம். புரியலியா குட்டீஸ்... உதாரணம் தருகிறேன். அப்போ உங்களுக்கு புரியும்.But - ஆனால்,When / While - பொழுது,And - ம்/மேலும்,Because - ஏன் என்றால்,Before - முன்பு,After - பின்பு,Either or - இது அல்லது அதுneither nor - இதுவுமில்லை அதுவுமில்லை.Though, Although, Even though - இருந்தாலும் கூடveena and sheena என்று சொல்லும்போது வீனாவும், ஷீனாவும் என்று அர்த்தம். இந்த இருவரையும், 'உம்' என்ற வார்த்தை இணைக்கிறது அல்லவா? இதுதான் ConjunctionsAs soon as we reached the station, the train steamed out - நாங்கள் ஸ்டேஷனை அடைந்த உடனேயே வண்டி கிளம்பிவிட்டது.When rani came, Madhu went away. ராணி வந்ததும் மது சென்று விட்டாள்.Conjunction ன்னா என்னன்னு இப்போ புரிஞ்சுதா?Interjection: இப்போ நாம பார்க்கப்போறது Interjection உணர்ச்சி வாக்கியங்கள். அதாவது மனிதன் தனக்கு ஏற்படும் கோபம், அதிர்ச்சி, வருத்தம், சந்தோஷம், ஆச்சரியம் இவற்றை வெளிப்படுத்த பயன்படும் வார்த்தைகளை Interjection என்கிறோம். உதாரணமாக.Oh - ஓ,Oh my god - அடக்கடவுளே,Well done - சபாஷ்,Hurrah i won the match - ஓ! நான் மேட்ச்சில் வெற்றி பெற்றேன்.Nasty - ச்சீ!Beware - ஜாக்கிரதை!What a surprise - என்ன வியப்பு!இப்படிச் சொல்வதை, Interjection என்கிறோம். இதுவரை Parts of speech ல் உள்ள எட்டு பாகங்களை உங்களுக்கு சுருக்கமாகச் சொன்னேன்.அடுத்து நீங்க கத்துக்கப்போறது Articles- a, an, the என்ற மூன்று சொற்களை Articles என்கிறோம்.Vowels - A E I O U உயிரெழுத்துக்கள்,Consonants - B C D F G H J K L M N P Q R S T V W X Y Z மெய்யெழுத்துக்கள்.Articles - இருவகைப்படும்.அவை Definite articles, Indefinite articles. சரியா பட்டூஸ்!தெரிந்த பொருட்களைப் பற்றி குறிப்பிடும்போது Definite articles பயன்படுத்த வேண்டும். The என்பது Definite articles ஒரு பொருளையோ, நபரையோ அறிமுகப் படுத்தும்போது Indefinite articles பயன்படுத்த வேண்டும். a (or) an இவை Indefinite articles.உதாரணமாக;ஒரு புத்தகம் - a bookஒரு மரம் - a treeஒரு பை- a bagஒரு ஆரஞ்சு என்று சொல்லும்போது an orange, an ice cream, an umbrella என்று சொல்ல வேண்டும். காரணம், orange என்பது a,e,i,o,u என்ற vowels ல் உள்ள o என்ற எழுத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதால் an orange என்று வரவேண்டும். அதாவது a,e,i,o,u என்ற எழுத்துக்களை கொண்டு ஆரம்பிக்கப்படும் வார்த்தைகளுக்கு முன்பாக, an போட வேண்டும் என்பது விதி. சரியா?an action, an eagle, an idle, an oil can, an umpireஆங்கிலத்தில், a,e,i,o,u என்ற ஐந்தும் தான் உயிரெழுத்துக்கள். தமிழில் அ முதல் ஔ வரை உள்ள உயிரெழுத்துக்களில் எந்த எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு தொடங்கும் வார்த்தைக்கு முன், an போட வேண்டும்.a,e,i,o,u இல்லாத hour, hotel, honest என்ற வார்த்தைகளுக்கு முன்பும் an போடுவோம். ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்?Hour - அவர்Hotel - ஓட்டல்an honest - (ஆனஸ்ட்)அவர், ஓட்டல், ஆனஸ்ட் என்றுதான் உச்சரிக்க வேண்டும். இப்போ இதன் உச்சரிப்பில் உயிரெழுத்து வருவதால், 'an'சேர்க்க வேண்டும்.புரியுதா குட்டீஸ்...கடைசியாக, 'The' என்ற article. இதை எல்லாருக்கும் தெரிந்த பொருட்களை குறிப்பிட பயன்படுத்த வேண்டும். The sun is rising in the east.இங்கே சூரியன் என்பது எல்லாருக்கும் அறிமுகம் ஆன பொருள். எனவே, இப்படிப் பட்டவற்றை குறிப்பிடும்போது, The பயன் படுத்த வேண்டும்.வர்ஷிதா மிஸ்... ஒரு, 'டவுட்'... Theயை, 'தி' என்று சிலரும், 'த' என்று சிலரும் உச்சரிக்கிறாங்களே... இதில் எது சரி மிஸ்?ஹ... ஹா... சூப்பர் கேள்வி கேட்டீங்க. இரண்டு உச்சரிப்புமே சரிதான். அதாவது, உயிரெழுத்து Vowels முன் The வரும்போது, 'தி' என்றும், மெய்யெழுத்துக்கு முன் The வந்தால், 'த' என்றும் உச்சரிக்க வேண்டும். புரியலியா?The answer (தி ஆன்ஸர்)The question (த க்வெஸ்சன்)பேசிப் பழக குட்டி வாக்கியங்கள்!சரி... Grammar அத்தனையும் கற்ற பிறகு நீங்கள் ஸ்போக்கன் இங்கிலீஷ் போவதற்குள் ரொம்ப போரடிச்சிடும் இல்லயா? ஸோ... குட்டி குட்டி வார்த்தை களை இப்பவே பேசிப்பழகுங்க.won't you go? - நீ போக மாட்டாயா?will you do one thing? - ஒரு வேலை செய்வாயா?what did you say? - என்ன சொன்னீர்கள்?How do you come back? - நீ எப்படித் திரும்புவாய்?What are you looking for? - என்ன தேடுகிறீர்கள்?What is the menu for dinner? - இன்று என்ன சாப்பாடு?Is it holiday today? - இன்று விடுமுறையா?வகுப்பில் உங்க, 'மிஸ்' இதெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்களா? குட்! எல்லா வற்றையும் ஒருமுறை நினைவு படுத்தி வையுங்கள். நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம்!- ஸீயு! வர்ஷிதா.