உள்ளூர் செய்திகள்

நண்டு அழகிகள்

பாறைகள் நிறைந்த கடற்கரையில் ஓடுடைய சிறிய பெரிய உயிரினங்கள் வாழும். இப்படிப்பட்ட ஓடுடைய உயிரினங்களின் தாதாக்கள் லாப்ஸ்டர் மற்றும் நண்டுகளாகும். லாப்ஸ்டர் என்பது நண்டை போன்றதுதான்; சற்று பெரிய உருவம் வெளிநாடுகளில் அதிகம் காணப்படுகிறது. லாப்ஸ்டர் வகைகளில், நமது கவனத்தை ஈர்ப்பவை மூன்று வகைகள். அவை, ஐரோப்பிய லாப்ஸ்டர், முட்கள் உடைய லாப்ஸ்டர் மற்றும் வடக்கு லாப்ஸ்டர். இதில், முட்கள் உடைய லாப்ஸ்டர், வடக்கு லாப்ஸ்டரும் அமெரிக்காவில் காணப்படுகிறது.இந்த லாப்ஸ்டரின் மிருதுவான சதைப்பகுதி, இதனை எளிதாக வாழவிடுவதில்லை. லாப்ஸ்டரை உணவாக கொள்ளும் மக்கள் ஏராளம். இந்த லாப்ஸ்டரை பிடித்து விற்று வாழ்ந்த மக்களும் ஏராளம்.ஆனால், மிக அதிகப்படியான மீன் பிடிப்பு, அதிகமாக குளிராகி கொண்டு வரும் அட்லாண்டிக் பெருங்கடலில் தட்வெப்பநிலை ஆகிய காரணங்களால் லாப்ஸ்டரை உணவாக கொள்வது லாப்ஸ்டரை வியாபாரம் செய்வது ஆகியன பெரிதும் குறைந்துவிட்டது.இந்த லாப்ஸ்டர் தனித்து வாழும் மிக ஆக்ரோஷமான பிராணியாகும். இவை, கரையிலிருந்து தள்ளி, ஆழ் கடலில் இருக்க விரும்பும். இவை, இரவில் கடல் அர்ச்சின் (சிறிய முட்களை உடைய ஓடு உடைய உயிரினம்), நத்தைகள், மற்றும் புழுக்களை தேடிச் சென்று உண்ணும்.பகலில் இவை கடல்பாசி நிறைந்த பகுதிகள் அல்லது பாறை பிளவுகளில் மறைந்து கிடக்கும். நண்டுகளில் மிக அதிகம் காணப்படுபவை, பாறைகள் நிறைந்த கடற்கரையில் வாழும் பச்சை நண்டுகள்தான். இவை ஐரோப்பிய நண்டு வகை என்றாலும், காணப்படுவது என்னவோ அமெரிக்ககாவில்தான். இவை உண்பதில் வெகு விருப்பம் கொண்டவை.அதனால் வேட்டையாடுவதும், கொல்வதும் உண்பதும் என எப்போழுதும் பிசியாக இருக்கும். பாவம் அதிகம் பலியாவது புழுக்களும், நத்தைகளும்தான்.அமெரிக்க கடற்கரையில் காணப்படும் பிற நண்டு வகைகளில் பிரபலமானவை, பாறை நண்டு மற்றும் சிலந்தி நண்டு. தென் பகுதியிலோ, பச்சை நண்டுகளின் இடத்தை நீல நண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளன. இவை முக்கியமான வியாபார பொருளாகும். வருடத்திற்கு 900 முதல் 3,600 டன்கள் அளவுக்கு நீல நண்டுகள் அறுவடை செய்யப்படுகின்றன.***இதோ நமக்கு முன்னே நீண்ட குச்சி கால்களோடு போஸ் கொடுக்கிறாரே... இவர் பச்சை நண்டுக்காரர். இவரின் பச்சை பசேல் என்ற நிறத்தால், இவர் கடல் தாவரங்களின் நடுவில் சுலபமாக தன்னை மறைத்து கொள்வார். இவை, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அட்லாண்டிக் கரைகளில் வெகு சாதாரணமாய் பார்க்கலாம். இவை, அதிகமாய் சாப்பிடும் வகை. கடற்கரையோடு ஒட்டி வாழும்.இதோ இங்கே நம்மை பார்த்து கொண்டிருக்கிறாரே இவர்தான் ஐரோப்பிய லாப்ஸ்டர். இதன் அறிவியல் பெயர், 'பலினாரஸ் வல்காரிஸ்' இவை, நண்டுகளை போலவே பல விஷயங்களில் ஒத்திருக்கும். இதற்கு விரிவடைந்த வயிறு உண்டு. இதன் விநோத உடல் அமைப்பினால், எந்த திசையிலும் வேகமாக நகரவும், வேகமாக ஓடவும் உயிரினங்களை பிடிக்கவும் முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !