உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர் !

*பொறுப்பான டாடி ! ஹார்ன்பில் நீண்ட வலுவான அலகு கொண்ட பறவை இது. மர பொந்துகளில் கூடுகட்டும். ஆண் ஹார்ன்பில் ரொம்ப பொறுப்பான ஹஸ்பெண்ட் தெரியுமா? தன் மனைவி இட்ட முட்டைகளையும், தன் மனைவியையும் ரொம்ப பத்திரமாக பார்த்துக்கும் குட்டீஸ். தன் மனைவி, முட்டைகளை அடை காக்கும் போது, மர பொந்தின் குறுக்கே மண்சுவர் வைத்து அடைத்துவிடும். நடுவில் சிறுதுளையிட்டு அதன் வழியாக குஞ்சு களுக்கும், மனைவிக்கும் உணவூட்டும் இந்த ஆண் ஹார்ன்பில். ரொம்ப பொறுப்பான டாடியும், ஹஸ்பெண்ட்டும் கூட!* நீள மூக்கி ! மேற்கு ஆஸ்திரேலியா கடலோரப் பகுதியில் ஒரு வகை நீண்ட மூக்கு  டால்பின்கள் காணப்படுகிறது. இவை கடற்கரையோரம் வேட்டையாடும் போது வித்தியாசமான முறையில் தங்களை பாதுகாத்துக் கொள்கிறது. புத்திசாலி பாலூட்டியான டால்பின் கடற்பஞ்சை மென்மையான மூக்குப் பகுதியில் வைத்துக் கொள்ளும்.இருள் சூழ்ந்த குகை போன்ற பகுதியில் முற்கள் நிறைந்த ஸ்டோன்பிஷ் போன்றவற்றை வேட்டையாடும்போது, தங்கள் மீது முற்கள் குத்தாமல் அது பாதுகாப்பு அளிக்கிறது. கடற்பஞ்சை பெரும்பாலும் பெண் டால்பின் பயன்படுத்துகிறது. அதுவும் முக்கோண வடிவிலான கடற்பஞ்சை தேர்ந்தெடுத்து பயன் படுத்துகிறது. ஆராய்ச்சியாளர்கள் கடல்வாழ் பாலூட்டிகளில் இதுவே முதல் முறையாக பாதுகாப்பு ஆயுதத்தை பயன்படுத்துகிறது என்று கூறுகின்றனர்.* அமெரிக்காவின் ஓகியோ மாநில அரசு சில சட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது நகரத்தின் சாலைகளில் யாரும் விதிமுறைகளை மீறி பின்னோக்கி நடக்கக் கூடாது. யாரும் அனுமதியின்றி எலியை பிடிக்க கூடாது. ஞாயிற்றுக் கிழமை கடைகளில் சோளப்பொறி விற்கக்கூடாது. மது அருந்துபவர்கள் மீன் வாங்கி சாப்பிட கூடாது. இவையெல்லாம் சட்ட விரோதமான செயல் என்று அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !