உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்!

நார்வே அரசாங்கத்தால் சிறந்த கணித மேதைகளுக்கு வழங்கப்படும் பரிசு 'ஏபல்பரிசு' ஆகும். முதல் பரிசை 2003-ம் ஆண்டு வழங்கியது. உலகம் முழுவதும் உள்ள கணித மேதைகள் இந்த போட்டியில் கலந்துக் கொள்ளலாம். இது நோபல் பரிசுக்கு நிகரான பரிசாக கருதப்படுகிறது. பொதுவாக நோபல் பரிசு அறிவியல் துறைக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. நார்வே நாட்டில் வாழ்ந்த சிறந்த கணித மேதை 'நீல் ஹென்ட்ரிக் ஏபல்' என்பவரின் நினைவாக இப்பரிசு வழங்கப்படுகிறது. இவர் 1929ல் தன் 26-வது வயதிலேயே மரணமடைந்தார்.சீனாவில் ஹெல்த் கிளினிக் நடத்திவரும் ஹான்லீ என்பவர், வியாதியை குணப்படுத்த 'ஹீட் தெரபி' என்ற புதிய முறையை கையாள்கிறார். அதாவது, எண்ணெயில் மூழ்கி எடுக்கப்பட்ட ஒரு போர்வையால் நோயாளியை மூடி, பிறகு போர்வையில் நெருப்பு பற்ற வைத்து சிகிச்சை அளிக்கிறார். ஆனால், இதனால் நோயாளிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது ரிலாக்ஸ்டா 'பீல்' செய்வார்கள் என உறுதியளிக்கிறார் ஹான். இது என்ன விபரீதம் ஹான்!'சார்லஸ் பார்பியர்டி லாசெரி' என்பவர் பிரான்ஸ் பீரங்கிப்படை அதிகாரி. இவர் ராணுவ வீரர்கள் போர் காலத்தில் இருட்டில் தகவல்களை படிப்பதற்கு வசதியாக அட்டையில் துளையிட்டு எழுத்துக்களை எழுதினார். இவர் முயற்சியை 'பாரிஸ் அகடமி ஆப் சயின்ஸ்' ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், பார்வையற்றோருக்கான கல்வி நிறுவனம் ஒன்று இந்த எழுத்து முறையை ஏற்றுக் கொண்டது. ப்ரெய்லி அங்கு மாணவராக இருந்தார். சார்லஸ் பார்பியரின் ரகசிய மொழியை அடிப்படையாக கொண்டு பார்வை யற்றோருக்கான எழுத்து முறையை ப்ரேய்லி கண்டுப் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !