டிஸ்னி உலகம்!
டிஸ்னி உலகம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டிருக்கிறது. டிஸ்னி உலகம், டில்லி உலகம் என்ற பெயரிலான நகரில் இருக்கிறது. வால்ட் டிஸ்னியால் உருவாக்கப்பட்டது டிஸ்னி. ஆரம்பத்தில் எட்டு ஏக்கர் பரப்பில் கட்டப்படத் திட்டமிடப்பட்டது. இப்பெயர் முதலில், வால்ட் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பெயராகப் பயன்படுத்தப்பட்டது. இதன் உள் வாளகத்தினுள் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் சூயிங்கம் மற்றும் மது பானங்கள். இதன் வேலைகள் நடைபெறும்போது வால்ட் டிஸ்னி அடிக்கடி வந்து பார்ப்பார். அமைப்பு வேலைகளை குழந்தைகள் எப்படி விரும்புவர் என்கிற கோணத்தில் ஆராய்வார். இந்த உலகத்தின் முகவரி 1313 ஹார்பர் புலிவார்ட் என்பதாகும்.உலக முகவரியில் உள்ள 13 என்ற, எண் மிக்கி மவுஸைக் குறிக்கும் 'M' என்ற ஆங்கில எழுத்து அரிச்சுவடியில் 13வது எழுத்தாக வருவதைக் குறிக்கிறது. 13 என்ற எண் தீய விளைவுகளைக் கொண்டு வரும் என்ற மூடநம்பிக்கையைத் தகர்ப்பதற்காக வால்ட் டிஸ்னி அப்படி வைத்தார் என்று சொல்வர்.இந்த உலகம் முதன்முதலாக 1955 ஜூலை 17 அன்று திறந்து வைக்கப்பட்டது. உலகத் திறப்பு விழாவிற்கு 6000 அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன. திறப்பு விழாவிற்கு 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டனர். திறப்பு விழாவிற்கு வந்தவர்கள் வைத்திருந்த அனுமதிச் சீட்டுக்களில் பெரும்பாலானவை போலிச் சீட்டுக்களாகும். டிஸ்னி உலகம் அமைக்க, 17 கோடி டாலர் செலவாயிற்று. இந்த உலகத்தினுள் உள்ள விலங்குகள் உண்மையான விலங்குகளைப் போலத் தோற்றம் தரக் கூடிய செயற்கையாக உருவாக்கப்பட்ட விலங்குகள். இதன் உள்ளே வெவ்வேறு பகுதிகள் மெயின் ஸ்ட்ரீட், அட்வென்ச்சர், ப்ரான்டியர் லேண்ட், பன்டஸிலேண்ட், டுமாரோலேண்ட் என்று அழைக்கப்படுகின்றன.