உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

ரத்தம் எவ்வாறு உறைகிறது தெரியுமா குட்டீஸ்!ஒருவரின் உடலில் காயம்பட்டு ரத்தம்வரினும், சற்று நேரத்தில் ரத்தம் வடிவது நின்று விடுகிறது. அவ்வாறு ரத்தத்தை உறைய வைப்பது ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் ஒன்றான பிளேட்லெட்ஸ் ஆகும்.இந்த பிளேட்லெட்டுகள் த்ரோம்போப்ளாஸ்டின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த த்ரோம்போப்ளாஸ்டின் ரத்தத்திலுள்ள கால்சியம் மற்றும் ப்ரோத்ரோம்பின் ஆகியவற்றோடு இணைந்து பைப்ரின் என்ற வலை போன்ற பொருளை உண்டாக்குகிறது.இந்த பைப்ரின் ரத்தம் வடியும் இடத்தை அடைத்துக் கொண்டு, ரத்தம் வழிவதை நிறுத்தி விடுகிறது. கூடவே, இந்த வலையின் மேற்பாகத்திலுள்ள செல்கள் சற்று நேரத்தில் இறந்து விடுகின்றன. எனவே, ரத்தம் வழிவது முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. இறந்த செல்களால் ஆன தடுப்பே, நமது புண்களின் மீது காணப்படும் காய்ந்த ரத்தம் ஆகும்.ரத்தம் உறையும் காலம் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு சீக்கிரத்தில் ரத்தம் உறைந்து விடும். சிலருக்கு சற்று தாமதம் ஆகலாம். ரத்தம் உறைவது வெகு தாமதமாவதோ அல்லது உறையாமல் போவதோ, 'ஹீமோபிலியா' என்று அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !