தெரிஞ்சுக்கோங்க!
பால் பாயின்ட் பேனாவின் அமைப்பு முறை கடந்த, 20ம் நுாற்றாண்டின் துவக்கத்திலேயே, பதிவு செய்யப்பட்டது. ஆனால், தடையின்றி, சரளமாக எழுதும், பால் பாயின்ட் பேனா, 1943ல் தான் உருவாக்கப்பட்டது. விமானத்தில் பறக்கும் போது, பயன்படுத்த, காற்றழுத்தத்தினால் மை கொட்டாத பேனாவைக் கண்டுபிடிக்க அமெரிக்காவில் முயன்றனர்; வெற்றியும் கிடைத்தது.விமானத்தில் பறக்கும் போது, பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கப் பட்ட பால் பாயின்ட் பேனா, இன்று அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்தி, வேகமாக எழுதலாம்; மை கசியாது; கை வலிக்காது. இத்தகைய சிறப்புகளால் அதிகம் பயன்படுத்துகின்றனர்.