உள்ளூர் செய்திகள்

மடக்கும் பொம்மை நாற்காலி!

தேவையான பொருட்கள்:மெல்லிய நீண்ட கம்பி ஒன்று.(பழைய மின் வயரிலிருந்து எடுக்கலாம்) கெட்டியான கார்ட் போர்டு, கலர்பேப்பர், கறுப்பு கிராப்ட் பேப்பர் வட்டமாக கட் செய்தது. கத்திரிகோல் மற்றும் பசை.செய்முறை:1) கார்ட் போர்டு துண்டை படம் 1ன் படி இரண்டு வடிவங்களில் 'கட்' செய்து எடுத்துக் கொள்ளவும். இதன் இரண்டு பக்கமும் கலர் பேப்பரை ஒட்டவும். வட்ட வடிவ கறுப்பு கிராப்ட் பேப்பரை நடுவில் ஒட்டவும்.2) மெல்லிய கம்பியை படம் 2ன்படி வெவ்வேறாக வளைத்துக் கொள்ளவும். நாம் செய்து வைத்திருக்கும் கார்ட் போர்டு துண்டுகள் சரியாக பொருந்தும்படி 'ப்ரேம்' செய்யவும். 3) நாற்காலியை வடிவமைத்து மெல்லிய கம்பியைக் கொண்டு கட்டவும்.4) சதுர வடிவ கார்ட் போர்டு துண்டை நாற்காலியின் இருக்கையாக வைக்கவும். மற்றொரு துண்டு கார்ட் போர்டை நாற்காலியின் சாய்வுப் பகுதியில் பொருத்தவும்.மடங்கும் பொம்மை நாற்காலி ரெடி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !