உள்ளூர் செய்திகள்

தானிய வடை!

தேவையான பொருட்கள்:கொள்ளு, சோளம், மொச்சை - தலா 100 கிராம்எண்ணெய் - 500 கிராம்காய்ந்த மிளகாய் - 1இஞ்சி, புதினா, கொத்தமல்லி - சிறிதளவுஉப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:கொள்ளு, சோளத்தை முளை கட்டவும். மொச்சையை ஊற வைக்கவும். இவற்றுடன் காய்ந்த மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பின், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து பிசையவும். வாணலியில், எண்ணெய் காய்ந்ததும், மாவை வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். சுவை மிக்க, 'தானிய வடை!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.- எம்.நிர்மலா மகாதேவன், விழுப்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !