தொப்புள் எப்படி உருவானது?
நம் வயிற்று தொப்புள் எப்படி உருவானது தெரியுமா?தாயின் வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து அளிக்கவும், கழிவுகளை அகற்றவும் இணைப்பு குழாய் ஒன்று செயல்பட்டு வரும். இதை நச்சுக்கொடி என்பவர். குழந்தை பிறந்ததும் தாயுடன் தொடர்புடைய இந்த நச்சுக்கொடியை குழந்தையின் வயிற்றுப் பகுதியில் ஒரு முடிச்சுப் போட்டு வெட்டி அகற்றி விடுவர். வெட்டப்பட்ட இந்தக் கொடி சில நாளில் குழந்தையின் உடலிலிருந்து விழுந்து விடும். விழுந்த அவ்விடத்தில் அடையாளமாக (தழும்பு போல) தொப்புள் உருவாகும்.***