உள்ளூர் செய்திகள்

உள்ளேன் அய்யா!

நான், 5ம் வகுப்பு படித்த போது எங்கள் தமிழ் ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். அவரை கண்டால் மாணவர்கள் அனைவருக்கும் பயம். அதிலும் எனது நண்பனான ரவிக்கு மிகவும் பயம். முதல் நாள் நடத்திய பாடங்களை, அடுத்த நாள் கேள்விகளாக கேட்பார். பதில் சொல்லவில்லை என்றால் அடி பின்னிடுவார். ஒருநாள், என் நண்பன், 'டேய் அருள்! நேற்று எங்கள் வீட்டுக்கு உறவினர் வந்ததால், ஜாலியா விளையாடினேன்; சரியா படிகலைடா. ஆசிரியரை நினைச்சா பயமா இருக்கு; நீதான் என்னை காப்பாத்தணும்'னு கெஞ்சினான்.அப்போது எனக்கும், சக நண்பர்களுக்கும் ஒரு ஐடியா தோன்றியது. 'டேய் நம்ம வகுப்பறையில உள்ள மண்ணென்ணெய் பேரல் காலியாக இருக்கு. அதுக்குள்ள ஒளிஞ்சிக்க. தமிழ் ஆசிரியரோட வகுப்பு முடிச்சதும், உன்னை வெளியில் எடுத்திடுரோம்'னு சொல்ல அந்த பெரிய மண்ணெண்ணெய் அடைப்பானில் ஒளிச்சி வைச்சோம். பிறகு பள்ளியறைக்குள் வந்த ஆசிரியர், வழக்கம்போல் வருகை பதிவேடு எடுக்க ஆரம்பித்தார்.எங்கள் ஒவ்வொருவர் பெயரையும் கூறவே, 'உள்ளேன் அய்யா' என கூறினோம். பிறகு ஒளிந்திருக்கும் நண்பனின் பெயரை ஆசிரியர் கூற, அவன் பழக்க தோஷத்தில் தன்னை மறந்து, 'உள்ளேன் அய்யா' என்று பலமாக சொன்னான். ஆசிரியருக்கு பின்னாடி எதிர்பாராத இந்த சத்தம் வரவே, பயத்தில் துள்ளி குதித்த ஆசிரியர், மண்ணென்ணெய் பேரலை திறந்து பார்க்க, உள்ளே என் நண்பன் ரவி. பிறகென்ன? உண்மையை அறிந்த ஆசிரியர், செம அடி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியை இன்று நினைத்தாலும் வயிறு குலுங்க சிரிப்பேன்.- டி.அருள் பிரகாஷ், பள்ளபாளையம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !