உள்ளூர் செய்திகள்

காமராஜர்!

தமிழக முதல்வராக பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்த நேரம்...ஒரு நாள், பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சாலையில் தவறாக ஒரு வழிப்பாதையில், அவரது கார் சென்று கொண்டிருந்தது.அதை கவனித்தவர், 'ஏன் அனுமதியில்லாத பாதையில் செல்கிறாய்... காரை திருப்பு...' என கூறினார்.'ஐயா... இரவு நேரத்தில், போக்குவரத்து மிகவும் குறைவாகத் தான் இருக்கிறது; இந்த பாதை வழியே சீக்கிரம் வீட்டுக்கு சென்று விடலாம்...' என்றார் ஓட்டுனர்.'இரவு நேரம் என்றால் எப்படி வேண்டுமானாலும் போகலாமா... கூட்டம் இல்லை என்பதற்காக இப்படிப் போவது தவறு. இதுவே பழக்கமாகி விடும். சட்டத்தை இயற்றும் நாமே பின்பற்றவில்லை என்றால், மற்றவர்கள் எப்படி கடைப்பிடிப்பர்...' என கூறி முறையான பாதையில் காரை ஓட்டக் கட்டளையிட்டார்.வேறு வழியில்லாமல் திரும்பி, சரியான பாதையில் ஓட்டி சென்றார் ஓட்டுனர்.அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்பதே காமராஜரின் எண்ணம்.இன்று காமராஜர் நினைவு நாள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !