உள்ளூர் செய்திகள்

கத்திரிக்காயா... விடவேமாட்டேன்!

நம்மில் பலருக்கு கத்தரிக்காயை பிடிக்கவே பிடிக்காது இல்லையா. இதை 'சொறி காய்' என்றே சொல்வர். அலர்ஜி உள்ளவர்கள் இதை சாப்பிடமாட்டார்கள். அதன் குணநலன்களை தெரிந்து கொண்ட பின், நிச்சயம் அப்படி சொல்லவே மாட்டீங்க. ஐ லவ் யு கத்தரி என்றுதான் சொல்வீங்க.கத்தரிக்காய் ஊதா, பச்சை, வெள்ளை போன்ற நிறங்களில் இருக்கின்றன. இப்படி பல நிறங்களில் இருந்தாலும் சத்து என்னவோ அனைத்திலும் ஒன்று தான்!எப்போதும் முற்றிய கத்தரிக்காய்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது. அப்படியே சமைத்தாலும் அளவோடுதான் அதை சாப்பிட வேண்டும். ஏனென்றால், இவைதான் உடலில் அரிப்பையும், சொறி சிரங்கையும் ஏற்படுத்தும். அதனால், பிஞ்சு கத்தரிக்காய் தான் சமையலுக்கு சிறந்தது.கத்தரிக்காயில் புரதம், கால்ஷியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவை உள்ளன. மேலும், வைட்டமின் ஏ, பி1, பி2, சி ஆகியவையும் அடங்கியுள்ளன. வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியை போக்கும்.ஸ்ட்ரோக், ஆஸ்துமா, ஈரல் நோய், சளி, பித்தம், கரகரப்பான குரல், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். மேலும், உடல் பருமனை குறைக்கும். உடல் சோர்வு இருக்காது. மூச்சு விடுவதில் சிரமம், தோல் மரத்துப் போவது போன்றவை தடுக்கப்படும்.கத்தரிக்காயை எப்படி பார்த்து வாங்குவது?காம்பு நல்லா பச்சையாக இருக்க வேண்டும். காயை மெல்ல அழுத்தினால் மெத்து மெத்தென்று இருக்க வேண்டும். அழுத்தமாக இருப்பதில் விதை இருக்கும். அதை வாங்க கூடாது. ரகசியம் தெரிஞ்சிடிச்சா? இனி கத்தரிக்காய் மசாலா, வறுவல் என செய்து அசத்துங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !