உள்ளூர் செய்திகள்

பேன் தந்த அறிவுரை!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1993ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... அன்று, சமூக அறிவியல் ஆசிரியர் வரலாறு பாடத்தை ஆர்வமாக நடத்திக் கொண்டு இருந்தார். அதை கவனிக்காமல், அருகில் இருந்த தோழியின் தலையைப் பார்த்தபடி இருந்தேன். நிறைய பேன்கள் இருந்தன. பாடவேளையை பொருட்படுத்தாமல், பேன்களை எடுத்தேன். அதைக் கவனித்துவிட்டார் ஆசிரியர். பாடத்தில் மூழ்கியது போல் சமாளித்தேன்.மீண்டும் பேன் எடுத்த போது, கையும் களவுமாக பிடித்துவிட்டார். மிகவும் கோபத்துடன், வகுப்பை விட்டு வெளியேற ஆங்கிலத்தில் உத்தரவிட்டார்.மாணவர்கள் ஏளனமாக சிரித்தனர்; வாக்குவாதம் செய்தபடி வெளியேறினோம். பாடவேளை முடிவதற்காக காத்திருந்தோம். வகுப்பை முடித்து வெளியே வந்தவரிடம் மன்னிப்பு கேட்டோம். மிகுந்த பரிவுடன், 'பாடத்தை கவனிக்காமல், சின்னக் குழந்தை மாதிரி பேன் எடுத்தது தவறு; ஆனால், பேனை தலையில் வைத்திருப்பது அதை விட தவறு... தலையை சுத்தமாக பராமரியுங்கள்...' என அறிவுரை கூறினார்.என் வயது, 42; இன்றும் அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை.- ரா.ஞானசெல்வி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !