உள்ளூர் செய்திகள்

மாம்பழ கூட்டான்!

தேவையான பொருட்கள்:மாம்பழம் - 1துருவிய தேங்காய் - 0.5 மூடிபச்சை மிளகாய் - 5அரிசி மாவு - 0.5 தேக்கரண்டிதயிர் - 2 தேக்கரண்டிதேங்காய் எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவுகடுகு, வெல்லம், பெருங்காயத்துாள், கருவேப்பிலை - சிறிதளவு.செய்முறை:மாம்பழத்தை துண்டுகளாக்கி, வேக வைக்கவும். அதனுடன் தேங்காய், பச்சை மிளகாய், அரிசி மாவு, வெல்லம் சேர்த்து நன்றாக அரைக்கவும். அதில், உப்பு, பெருங்காயத் துாள், தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்த பின், தயிர் கலந்து இறக்கவும். வாணலியில், தேங்காய் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கருவேப்பிலை தாளித்து கொட்டவும். சுவை மிக்க, 'மாம்பழ கூழ்' தயார். விரும்பத்தக்க வாசனையுடன் அனைத்து வயதினரையும் கவரும்!- கிரிஜா ராகவன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !