கோடீஸ்வரன் இல்லையே...
அம்மூஸ் உலக புகழ் பெற்ற ஓவியர் பிகாசோவின் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி பார்க்கலாமா!ஒருமுறை பிகாசோ அவர்கள் தன் நண்பர்களை விருந்திற்காக வீட்டுக்கு அழைத்தார். வந்தவர்களில் ஒருவர் பிகாசோ வீட்டு சுவரை பார்த்து ஆச்சரியப்பட்டு, பிகாசோவிடம் 'நீங்கள் உலக புகழ் பெற்ற ஓவியர், ஆனால் உங்கள் வீட்டுச் சுவரில் உங்களுடைய ஓவியம் ஒன்று கூட இல்லையே!' என்று கேட்டார்.அதற்கு பிகாசோ, மிகவும் தன்னடக்கத்துடன், 'எனக்கும் எனது ஓவியங்களை மாட்டி வைக்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால் அதிக விலை கொடுத்து வாங்கி சுவரில் மாட்டுவதற்கு நான் கோடீஸ்வரன் இல்லையே...' என்று பதிலளித்தார்.