சத்துமிக்க வாழை!
'தினமும் ஒரு ஆப்பிள் தின்றால் மருத்துவரிடம் போக வேண்டாம்' என்பது, ஆங்கில முது மொழி. நான்கு ஆப்பிளில் உள்ள சத்து, ஒரு வாழைப்பழத்தில் உள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.கொழுப்பு சத்தே இல்லாதது வாழை பழம். இதில் உள்ள மாவு சத்து, உணவுகள் மீதான ஆர்வத்தை தடுக்கிறது. இதனால், அளவுடன் உண்ண வகை செய்கிறது.உடலின் முழு இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது; கால்சியம், மக்னீசியம் சத்துக்களை முழுமையாக தருகிறது. முழுமையாக பழுக்காத, நடுத்தர அளவுள்ள பழத்தில், 4.7 கிராம் மாவுச்சத்து இருக்கிறது. இது, பசியை தடுக்கும். கலோரி குறைவு என்பதால், உடல் எடை அதிகரிப்பை தடுக்கும்.கோதுமை, மக்காசோளம், பருப்பு, உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் எல்லாம் இதில் உள்ளன. புரோட்டின், கார்போ ஹைட்ரேட், பொட்டாஷியம், வைட்டமின் - சி, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள், ஆப்பிளை விட, வாழையில் பல மடங்கு அதிகம். தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டால், ஆரோக்கியம் நிச்சயம்!டில்லி உணவு நிபுணர்கள் இதை கூறியுள்ளனர்.