ஓமன்!
பரப்பளவு - 309,500 சதுர கிலோமீட்டர்மக்கள் தொகை - 5,223,375தலைநகரம் - மஸ்கட்பணம் - ஓமன் ரியால் ஏற்றுமதி - மீன், பேரீச்சம்பழம் மற்றும் உலோகங்கள்மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்று ஓமன். அழகிய பள்ளத்தாக்கு, மண் வீடுகள், காவற்கோட்டை, பழமையான குகைகள் பலவற்றை உடையது. இது, அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கு கரையில் அமைந்துள்ளது. வடமேற்கில், ஐக்கிய அரபு அமீரகமும், மேற்கில் சவுதி அரேபியாவும், தென்மேற்கில் யெமனும் எல்லைகளாக அமைந்துள்ளன. தெற்கு மற்றும் கிழக்கில் அரபிக் கடல் உள்ளது. ஒரு காலத்தில், இந்த இடத்தை போர்ச்சுக்கீசியர் ஆண்டு வந்தனர்; அவர்களை விரட்டி, பெர்ஷியர்கள் ஆட்சியை பிடித்தனர். இந்த பகுதி, ஐரோப்பிய நாடான இங்கிலாந்துடன் தொடர் நட்பில் இருந்தது; ஆனால், காலனியாக மாறியதேயில்லை. இங்கு, 7ம் நுாற்றாண்டில் இஸ்லாம் அறிமுகமாகியது. இஸ்லாமியர், 85.9 சதவீதம் வசிக்கின்றனர். இஸ்லாமிய நாடாக, 1996ல் பகிரங்கமாக அறிவித்து கொண்டது.ஓட்டுரிமை, 18 வயது நிரம்பியவர்களுக்கு, 2003ல் கொண்டு வரப்பட்டது. ஓட்டெடுப்பின் மூலம், 83 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். எல்லா அதிகாரமும் ஆட்சி செய்யும், சுல்தானுக்கே உள்ளது. இந்தியா நட்பு நாடாக உள்ளது.இங்கு வசிப்பவர்களில், 55 சதவீதம் பேர், ஓமனை சேர்ந்தவர்கள்; மற்றவர்கள் வெளிநாட்டினர். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தோர் அதிகம் வசிக்கின்றனர். பெட்ரோல், தாமிரம், ஆஸ்பெஸ்டாஸ், சலவைக்கல், சுண்ணாம்புக்கல், குரோமியம், ஜிப்சம், இயற்கை எரிவாயு போன்றவை தான் இந்த நாட்டின் சொத்து.இதன் பாரம்பரிய பெருமை காக்க, 'தி பெயட் அல் ஜூபாரி' அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கே உரிய பாரம்பரிய நகைகள், உடைகள், பாத்திரங்கள் உட்பட பழம்பொருட்கள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.ஆண்கள் குல்லா அணிந்திருப்பர்; அதை, 'குமாக்' என அழைப்பர். இது, பல ரகமாக வண்ணங்களில் அழகாக இருக்கும். ஆண்கள், 'டிஸ்டா சாக்' என்ற பெயருள்ள பாரம்பரிய ஆடை அணிவர்; பெண்கள் ஆடைக்கு, 'ஹிஜாப்' என்று பெயர்.இங்கு தயாரிக்கப்படும் சில உணவுகள் மிகவும் பிரபலம். தயிர் மற்றும் பாலாடையை இணைத்து, 'லாப் எனக்' என்ற உணவு தயாரித்து சாப்பிடுவர்; மிக சுவையாக இருக்கும். சுறா சூப் மற்றும் 'கக்வா காப்ப' என்ற உணவுகளும் பிரபலம்.இந்த நாட்டில் கட்டடங்களுக்கு, 'ராயல் ஒயிட்' என்ற வண்ணம் தான் பூச வேண்டும். மாற்று வண்ணம் பூச விரும்பினால், அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். எந்த வண்ணத்திலும், கார்களை வைத்து கொள்ளலாம்; ஆனால், அழுக்கு கார், தெருவில் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் உண்டு.ஆண்டிற்கு, 60 மி.மீ., அளவு மழை பெய்கிறது. குளிர்காலத்தில் சராசரி வெப்பம், 18 முதல் 25 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும்.இங்குள்ள கடலில், ஆமைகளை காணலாம்; உலகில் உள்ள ஏழு கடல் ஆமை வகைகளில், இங்கு, ஐந்து உள்ளன. பச்சை நிற ஆமையையும் காணலாம். இங்குள்ள, 'ராஸ் அல் ஜீன்ஸ்' என்ற கடற்கரைப் பகுதி, ஆமைகள் இன பெருக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரிக்கிறது அரசு. குஞ்சுகள் பொறித்து வெளியே வந்ததும் பத்திரமாய் கடலில் விடுகின்றனர்.இந்த நாட்டு கடற்பகுதியில் திமிங்கலங்களை பார்வையிடுவது முக்கிய சுற்றுலாவாக உள்ளது. அவை மூழ்கி, தண்ணீரை பீய்ச்சி அடித்து, சண்டை போடும் காட்சிகள் ரசிக்கத்தக்கவை.இந்த நாடு, 1971ல், ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினரானது. இங்கு வருமானவரி வசூலிக்கப்படுவதில்லை.இங்குள்ள பாஹ்லா நகரம், மண் பாண்டங்களுக்குப் புகழ் பெற்றது. மத்திய கிழக்கு நாடுகளில், 50 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் ஓமன் சுல்தான் காபூர் பின் சைத் அல் சைத். இவர், ஜனவரி 2020ல் மரணமடைந்தார். தற்போது ஹைதம் பின் தாரிக் அல் சைத் சுல்தானாக பதவி வகிக்கிறார்.- பட்டு