மாசு!
வளி மண்டலம் என்பது காற்றால் எடுத்து செல்லப் பட கூடிய அனைத்து பொருள்களாலும் நிரம்பி யுள்ளது. காற்று மண்டலத்தின் மாசு என்பது புழுதி புயல்கள், காட்டுத் தீ மற்றும் எரிமலை வெடிப்பு ஆகியவைகளால் இயற்கையாக ஏற்படுகிறது. ஆனால், சமீப காலங்களாக மனிதன் வளி மண்டலத்தின் மாசு சுமையை வெகு அதிகப் படுத்தி விட்டான். உலகளவில் மக்கள் தொகை அதிகரித்த நிலையில் காற்று மண்டலத்தில் கலக்கப்படும் விவசாய மற்றும் தொழிலக கழிவுகளின் மாசும் அதிகரித்து விட்டது.இன்ஜின் மற்றும் உலைகளின் எண்ணெய், நிலக்கரி மற்றும் இயற்கை வாயு ஆகிய படிம எரிபொருள்கள் ஏராளமான வகைகளில் மாசை வெளிப்படுத்துகிறது. பிரிட்ஜிலிருந்து வெளிவரும் க்ளோரோப்ளோரோகார்பன், காற்றில் அடிக்கப்படும் ஸ்ப்ரே உள்ளிட்ட வேதியல் மூலங்கள் ஓசோன் படலத்தை மாசுப்படுத்துவதோடு, உண்மையில் அதனை அழித்திடவே செய்கிறது. மாசுப்படுத்துபவைகளின் பட்டியல்!*சல்பர் ஆக்ஸைடுகள் என்பது படிம எரிபொருள்கள் வெளிப்படுத்தும் சல்பர் மற்றும் ஆக்ஸிஜனின் கலவையாகும்.*நைட்ரஜன் ஆக்ஸைடு என்பது படிம எரி பொருள்களின் எரிதலால் உருவாக்கப் பட்ட புகைப்பனி மூட்டத்தால் உற்பத்தியாகிறது.*ஹைட்ரஜன் க்ளோரைட் என்பது சில தொழிற்சாலை செயல்பாடுகளில் வெளிப்படும் எளிதில் ஆவியாகிற கடும் நெடியுடைய வாயுவாகும்.*புழுதி பொருட்கள் பல விளைவுகளால் உருவாகி காற்றில் மிதக்கிறது. இந்த காற்றை சுவாசிக்கும்போது சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது.*புகை மற்றும் அட்டை கரி போன்ற புகை யில் கார்பன் மற்றும் தார் அதோடு நஞ்சு தன்மை சார்ந்த கேட்மியம் மற்றும் ஈயம் ஆகியவை உள்ளன.*ஏரோசால் எனப்படும் மிக நுண்ணிய துகள்கள் அந்தரத்தில் காற்றில் கலந்து மிகுந்த தீமைகளை ஏற்படுத்துகிறது.நகர்ப்புற மாசு!வலப்புற கிராப் 1980 முதல் 1985 வரை பிரதான நகர்ப் புற மாசுப்படுதலை காட்டுகிறது. 1 க்யூபிக் மீட்டர் காற்றில் உள்ள மாசுகளின் (மைக்ரோ கிராம்) எடை தரப் பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக, பெருக காற்றில் மிகப் பெரிய மாசுபடுதலை ஏற்படுத்துகிறது.