உள்ளூர் செய்திகள்

ப்ரேயிங் மேண்ட்டிஸ்!

'தொழும் பூச்சி' என்று அழைக்கப்படும் இதன் ஆங்கிலப் பெயர்தான் 'ப்ரேயிங் மேண்ட்டிஸ்.' கைகளைக் கூப்பி வணங்குவது போல் இது கால்களைக் தூக்கி நடப்பதால், இதற்கு 'தொழும் பூச்சி' என்று பெயர் சூட்டி விட்டனர்.பச்சை நிறப் பூச்சியான இதன் உடல் முக்கோண வடிவிலானது. இதன் கழுத்து சுழலும் விதத்தில் அமைந்திருப்பதால் எளிதில் இரையைப் பிடிக்க உதவுகிறது. முன் கால்கள் இரண்டும் மற்ற கால்களை விடப் பெரியதாக இருக்கும். 2 1/2 முதல் 3 அங்குல நீளம் வரை இது வளரும். தோட்டத்திலும், அடர்த்தியான புல்வெளிகளிலும் இவற்றை நீங்கள் பார்க்கலாம். மழை காலத்தில் அதிகம் தென்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !