ராக்கெட் வேக டிப்ஸ்
தீபாவளி பலகாரங்கள், பட்சணங்கள் ஆகியவற்றை அசத்தலாய் செய்து எல்லாரிடமும், 'சபாஷ்' வாங்குவது என்பது எல்லாராலும் முடியாத விஷயம். முடியாததை முடித்து வைக்க உதவும் டிப்ஸ்கள் இதோ...* குலோப்ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் பாகு உறையாமலும், கெட்டு போகாமலும் இருப்பதுடன் சுவையும் கூடுதலாகி நன்றாக இருக்கும்.*தேங்காய் பர்பி செய்யும்போது கொஞ்சம் பால் கோவா சேர்த்து கிளறினால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.*உளுந்து வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க, வடைக்கு அரைத்ததும் அதில், இரண்டு ஸ்பூன் அரிசி மாவு அல்லது ரவையை போட்டு கலந்து தட்டினால் எண்ணெய் குடிக்காது.* எந்தவித அல்வா செய்வதானாலும் சிறிது மில்க்மெய்ட் ஊற்றி கிளறினால், அல்வா நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.*போளிக்கு செய்த பூரணம் இளகலாகி விட்டால், சிறிது குலோப் ஜாமூன் மிக்ஸை போட்டு கலந்து விடலாம். இதனால் சரியான பதம் வருவதோடு வித்தியாசமான ருசியில் அசலத்தலான போளி கிடைக்கும்.*மைசூர்பாகு செய்யும் போது கடலை மாவுக்கு பதில் பயத்தம் மாவை கொண்டும் செய்யலாம். பயத்தம் மாவை நெய்யில் கரைத்து பின் சர்க்கரை பாகில் விட்டு கிளறினால் அருமையான கட்டியில்லாத மைசூர்பாகு கிடைக்கும்.*குலோப்ஜாமூன் மிக்ஸை வைத்து குலோப்ஜாமூன்தான் செய்ய வேண்டு என்பதில்லை. அதில், உப்பு, காரம், பன்னீர் சேர்த்து பிசைந்து பொரித்தெடுத்து, 'க்ரேவி'யில் போட்டால் அட்டகாசமான பன்னீர், 'கோப்தா' ரெடி!*தயிருக்கு பதிலாக, புளிக்கரைசலை விட்டு அவியல் செய்யலாம். ஆனால், தேங்காயுடன் பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாயை போட்டு அரைக்க வேண்டும். இந்த 'புளி அவியல்' விரைவில் நீர்த்து போகாது. தயிர் சாப்பிட பிடிக்காதவர்களுக்கான ஸ்பெஷல் அவியல் இது.*கேசரி செய்யும்போது தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பாலில் கேசரி செய்தால் அதிக சுவையாக இருக்கும்.*ரவா லட்டு செய்யும் போது மொத்த ரவை, சர்க்கரை கலவைக்கு 1/4 பங்கு மில்க் பவுடரையும் கலந்து செய்யுங்கள்.*கடலை உருண்டை பிடிக்கும்போது நல்லெண்ணெய் தொட்டு பிடித்து பாருங்கள். உருண்டையின் மேல் கண்ணாடி போன்று பளபளப்பாக இருக்கும்.* எல்லா வகையான கார பலகாரங்களுக்கும் மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் பலகாரம் மொறுமொறுவென்று நெய் மணத்துடன் இருக்கும். வாயில் போட்டதும் கரையும்.