உள்ளூர் செய்திகள்

"ச - வன்னா!

அடிப்படை உண்மைகள்! சவன்னா என்பது மிக விரிவான வெப்ப மழை பகுதிகளின் பெரிய பசும் புல்தரையை குறிக்கும் பொது பெயராகும். இது கண்டத்திற்கு கண்டம் மாறுபடும். ஆனால், மழை காலம் என்றால் தினமும் மழை பெய்வதும், வெயில் காலம் என்றால் மழை என்பதே இல்லாமல் இருப்பதும் இந்த கண்டத்தில் இருக்கும். சவன்னா பகுதியின் புற்கள் உயரமானவை. எப்போழுதும் 1 மீட்டர் (3 அடி) உயரத்தை தாண்டி விடும். புற்களில் பல வகைகள் வளர்ந்தாலும், பிரதானமாக இரண்டே இரண்டு வகைகள்தான் அதிக இடத்தில் வளர்ந்து காணப்படும். அப்படி இரண்டு வகைகள் மட்டும் அதிகம் காணப்படும்போது, அவைகளின் வளர்ச்சி காலம் வேறுபடுகிறது. அதனால் அந்த இரண்டு புற்களாலும் தாக்கு பிடிக்க இயலுகிறது.சவன்னாவின் அநேக பகுதிகளில் அங்கும் இங்கும் என வளர்ந்து இருக்கும். மரங்களும், வெவ்வேறு வகை புற்களும் காணப்படும். அப்படி மரங்கள் அதிகமாக காணப்படும் போது இந்த இயற்கை பசும் புல் தரை பகுதி வெப்ப மழை பருவகால காடாய் மாறுகிறது.வெப்ப மழை புல் நிலம்!சவன்னா என்னும் அமைப்பு இயற்கையின் கொடையான வெப்ப மழை பருவக்கால காடுகள் மற்றும் பாதி வறண்ட புற்கள் காணப்படும் நிலப்பகுதி ஆகியவற்றின் இடையே காணப்படும். இந்தியா, மற்றும் ஆஸ் திரேலியாவில் இந்த சவன்னா அமைப்பு, வெப்ப மழை காடுகளின் வளர்ச்சியோடு கைகோர்க்கிறது. தென் அமெரிக்காவிலோ சவன்னா அமைப்பு, தன் தென் எல்லையை மிதமான புல் நிலப்பகுதிகளுடன் முடிக்கிறது.தென் அமெரிக்கா!உலகில் உள்ள சவன்னாவின் மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தென் அமெரிக்க- பிரேஸில், பாராகுவே மற்றும் பொலிவியாவில் காணப்படுகிறது. இந்த பிரமாண்ட புல் விளைந்த நில பகுதியை 'கேம்போஸ்' அல்லது 'சொர்ராடோ' என்றழைக்கின்றனர். கேம்போஸ் பகுதி தன்னிடத்தில் விளையும் தாவரங்களிலும் தன்னிடத்தில் வாழும் விலங்குகளிலும் மிகவும் செழுமை மிக்கது.ஆனால், இதற்கு நேர்மாறாக கொலம்பியா மற்றும் வெனிசுலாவில் தாவர வளர்ச்சி குறைவு. ஆனால், விலங்குகள் மிக அதிக அளவில் காணப்படும். இதற்கு காரணம். வெனிசுலாவின் லேனாஸ் பகுதி, எப்போதும் வெள்ளத்தால் சூழப்படும். இந்த நீர் தேங்கும் தன்மை ஏராளமான பறவைகளையும், விலங்குகளையும் தன் வசம் காந்தத்தை போல ஈர்க்கிறது.சவன்னாவின் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்ஆப்பிரிக்க நெருப்பு கோழிதான், இரண்டு கால் விலங்குகளில் மிக வேகமானது. இது மணிக்கு 72 கி.மீ (45 மைல்ஸ் ஒரு மணிக்கு) வேகத்தில் ஒடக்கூடியது.கீழ் திசை நாடுகளின் சவன்னாஇந்தியாவின் புல் நிலப்பகுதிகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. காட்டை அழித்தல் மற்றும் விலங்குகளின் மேய்ச்சலால் இது போன்று உருவாகிவிட்டது. ஆனாலும் பல விலங்குகள் இப்பகுதியை வாழ்விடமாக்கி கொண்டுள்ளன. அவற்றில் நில்காய் அல்லது ப்ளூபக் எனப்படும் மானினம் ஒன்றாகும். இந்த மான் வகை பெரும்பாலும் காடுகளில்தான் காணப்படும். பிற பாலூட்டிகளான பிளாக் மான் மற்றும் சின்காரா ஆகிய விலங்குகள் பாலைவன வகைகள். அவை அங்கிருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்துள்ளன. இந்த நில்காய் மான், ஆசிய மான் வகைகளிலேயே மிகப் பெரியது. இதோ அருகே நிற்பது பெண் மான். வளர்ந்த ஆண் மான்களுக்கு சிறு கொம்புகள் உண்டு. சதுப்பு நிலம், வெள்ளத்தால் சூழப்பட்ட சமவெளி, திறந்தவெளி புல் பகுதி, பாறை குன்றுகள், புதர்களும் காடுகளும் கொண்ட சவன்னா, அடர்ந்த புதர்கள், நதியோர காடுகள், யானை கில்ப்ஸ்பிரிங்கர், ஆப்பிரிக்க மான், ஒட்டகச் சிவிங்கி, வரிக்குதிரை, காட்டெருமை.எல்லாருக்கும் உணவுண்டுஆப்பிரிக்க சவன்னாவில் ஏராளமான தாவரம் உண்ணும் விலங்குகள் இருப்பதற்கு காரணம், ஒருவர் உணவில் மற்றவர் பங்கு போடுவதில்லை. உதாரணத்திற்கு பர்செல்ஸ் வரிக்குதிரை மற்றும் காட்டெருமை ஆகியவைகளின் உணவு சிவப்பு ஒட் புற்கள். ஆனால், இந்த புல்லின் வளர்ச்சியின் வெவ்வேறு பகுதிகளின்போது இந்த விலங்குகள் இந்த புல்லை தின்னும். ஒரு விலங்கு புல்லை உண்ணும் காலத்தில் மற்ற விலங்கு அதை தின்னாது. பொதுவாக காணப்படும் ஆப்பிரிக்க மான் வகையான தாவர உண்ணி மேய்ச்சலாகவும், பொழுது போக்காவும் போகிற போக்கில் என்ன கிடைக்கிறதோ அவற்றை உண்ணும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !