உள்ளூர் செய்திகள்

தன்னம்பிக்கை!

சென்னை, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலை, சில்ரன்ஸ் கார்டன் பள்ளியில், 1959ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது தலைமை ஆசிரியையாக இருந்தார், எல்லன் சர்மா. பாகுபாடின்றி மாணவ, மாணவியரிடம் அன்பு செலுத்துவார். என் போன்ற மாற்றுத்திறனாளிகளை தவறாமல் ஊக்கப்படுத்துவார். எங்கள் பள்ளி ஆண்டு விழா மயிலை ரசிக ரஞ்சனி சபாவில் நடக்கவிருந்தது. அதில், ராமாயண பாதுகா பட்டாபிஷேகத்தை நாட்டிய நாடகமாக நடத்த முடிவு செய்து, நடன ஆசிரியை ரஞ்சனி ஒத்திகை நடத்திக் கொண்டிருந்தார். ஒத்திகை நடந்த அறையின் வெளியே நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வழியாக வந்த தலைமையாசிரியை, என் ஆர்வத்தை கவனித்து, என்னையும் நடனத்தில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைத்தார். முக்கிய வேடம் ஏற்று முறையாக பயிற்சி பெற்று நடனமாடினேன். அது, தன்னம்பிக்கையை வளர்த்தது. நன்றாக படித்து மின் வாரிய பணியில் சேர்ந்து உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றேன். எனக்கு, 79 வயதாகிறது: வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்த அந்த தலைமை ஆசிரியையை மனதில் கொண்டுள்ளேன்.- வை.பிரேமா, சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !