உள்ளூர் செய்திகள்

மொட்டை அடிக்கணும் (2)

''அரசே! உங்களுக்காக என் தலை முடியைக் காணிக்கை தருவதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஆனால், அதில் ஒரு சிக்கல் உள்ளது. உங்கள் அறிஞர் வெளியூர்களுக்கு எல்லாம் செல்வது இல்லை. அவர் முடியுடன் இருந்தாலும், மொட்டையடித்துக் கொண்டாலும் யாரும் பொருட்படுத்த மாட்டனர்.''என் நிலை வேறு. நம்பிக்கையை வைத்துதான் நான் வணிகம் செய்கிறேன். நான் மொட்டை அடித்துக் கொண்டால் பலருக்கு என்னை அடையாளம் தெரியாது. என்னுடன் அவர்கள் வணிகம் செய்ய மாட்டார்கள். எனக்கு ஆயிரம் பொற்காசுகளுக்கு மேல் இழப்பு ஏற்படும்,'' என்றான்.அவனைப் பார்த்த அவர், ''நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?'' என்று கேட்டார்.''அரசே! வணிகத்தில் எனக்கு ஏற்படும் இழப்பிற்கு ஈடாக ஆயிரம் பொற்காசுகள் தாருங்கள். நான் மொட்டை அடித்துக் கொள் கிறேன்,'' என்றான் அவன்.''உன் சிக்கல் எனக்கு புரிகிறது. உனக்கு இழப்பு ஏற்பட விடுவேனா? ஆயிரம் பொற்காசுகளைப் பெற்றுக் கொள்,'' என்றார் அரசர்.ஆயிரம் பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டான் வணிகன்.அரண்மனை முடி திருத்துபவன் அவன் அருகில் வந்தான்.உடனே அந்த வணிகன், ''அரசே நான் சொல்வதைக் கேளுங்கள். ஆயிரம் பொற்காசுகள் தந்து என் தலைமுடியை விலைக்கு வாங்கி விட்டீர்கள். இனி இந்த முடி அரசராகிய தங்களுக்குச் சொந்தமானது. அதனால் என் தலையை மொட்டை அடிப்பது தங்கள் தலையை மொட்டை அடிப்பது போல் ஆகும்,'' என்றான்.இதைக் கேட்ட அரசர் அதிர்ச்சி அடைந்தார்.''நீ சொல்வது சரிதான். உன் தலை முடியை நான் விலைக்கு வாங்கி விட்டேன். அது எனக்குச் சொந்தமானது. அதை யாரும் வெட்ட விடமாட்டேன். நீ சென்று உன் வேலையைப் பார்,'' என்றார்.அவ்வளவுதான். அவன் அங்கிருந்து வேகமாகச் சென்று மறைந்தான். திரும்பி வரவே இல்லை.'என்ன நடந்தது? வணிகன் பொற்காசுகளுடன் சென்று விட்டானே... ஏன் இப்படி நடந்து கொண்டேன்? ஒன்றும் புரிய வில்லையே?' என்று குழம்பினார் அரசர்.கோபாலை அழைத்த அவர், ''நீ சொன்னது போலவே நான் நடந்து கொண்டேன். ஏன் அப்படி நடந்து கொள்ளச் சொன்னாய்?'' என்று கேட்டார்.''அரசே! அறிஞர்களை விட வணிகர்கள் அறிவுக்கூர்மை மிகுந்தவர்கள். இதை நிரூபிக்கவே உங்களை இப்படி நடந்து கொள்ளச் சொன்னேன். நான் நினைத்தது போலவே நடந்தது.''மெத்தப் படித்த அறிவு நிறைந்த அறிஞர் இவர், தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டார். வெறும் நூறு பொற்காசு களுக்காக மொட்டையாகி நிற்கிறார். ஆனால், அந்த வணிகனோ உங்களிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்றுக் கொண்டான். தலையையும் மொட்டை அடித்துக் கொள்ளா மல் சென்று விட்டான். இப்போது நீங்கள் சொல்லுங்கள். இருவரில் யார் அறிவுக் கூர்மை உடையவர்,'' என்று கேட்டான்.அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது அப்பொழுதுதான் அரசருக்குப் புரிந்தது.மொட்டைத் தலையுடன் நின்ற அந்த அறிஞரைப் பார்த்தார். அவரால், சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிறு குலுங்கச் சிரித்தார்.''மீண்டும் கோபால் உங்களை வென்று விட்டானே. உங்களை விட வணிகன் அறிவு நிறைந்தவன் என்று நிரூபித்து விட்டானே,'' என்று சிரித்தபடியே சொன்னார் அரசர்.அதன்பிறகு அந்த அறிஞர்கள் கோபாலின் வழிக்கே செல்வது இல்லை.அரசரும், கோபாலை பாராட்டி பொன்னும்,பரிசும் கொடுத்தார்.முற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !