உள்ளூர் செய்திகள்

நடுங்குது குளிரு!

மனித உடலின் வெப்பம் 37.1 டிகிரி செல்சியஸாக இருக்க வேண்டும். இவ் வெப்பநிலை ஆங்கிலத்தில் 'கிரிட்டிக்கல் லெவல்' என்றழைக்கப்படுகிறது.குளிர்காலத்திலோ, காய்ச்சலின் போதோ நாம் குளிர்ச்சியான சூழ்நிலை யில் அமர்ந்திருக்கும்போது உடலின் வெப்பநிலையானது குறைந்து விடும். இதை அறிந்து கொள்ளும் மூளையின் ஹைப்போதலமஸ் பகுதியானது, உடலின் வெப்பத்தை அதிகரிக்கும்படி தண்டு வடத்திற்கு கட்டளை பிறப்பிக்கிறது.உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் பொருட்டு தண்டுவடமானது உடலின் தசைகளை இறுக்கி, உடல் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய வெப்பநிலையான 37.1 டிகிரி செல்சியஸோ அதற்கு மேலான வெப்பநிலையை உடலுக்குக் கொண்டு வருகிறது. குளிர்காலத்தில் நமது உடலின் தசைகள் இறுகுவதாலேயே நமது உடலில் நடுக்கம் உண்டாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !