உள்ளூர் செய்திகள்

சதுரங்க பேராதன்!

செஸ் என்ற சதுரங்க விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் மேன்மையானது. இதை தமிழில், 'சதுரங்க பேராதன்' என்பர். இதை பெறுவது செஸ் வீரர்களின் மிகப்பெரிய கனவாக உள்ளது. எப்.ஐ.டி.இ., என்ற சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு இந்த பெருமையை வழங்குகிறது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற, இந்த அமைப்பு சதுரங்கத்தில் வெவ்வேறு போட்டிகளுக்கு உரிய மதிப்பெண்களை அளிக்கிறது. அவற்றில் குறைந்தது 2,500 என்ற அளவை எட்டி இருக்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் பல நாட்டு வீரர்களுடன் விளையாடி இருக்க வேண்டும். இதைத் தவிர வேறு சில விதிகளும் உள்ளன. ஒருவர் கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதி பெற கடுமையாக உழைக்க வேண்டும். இந்த தகுதியை இந்தியாவில், 86 பேர் பெற்று உள்ளனர். அதில் விஸ்வநாதன் ஆனந்த், பென்டாலா ஹரி கிருஷ்ணா, கொனேரு ஹம்பி, குகேஷ், பிரக்யானந்தா புகழ் பெற்றுள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த் இந்த தகுதியை முதன் முதலாக, 1988ல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. - ஜி.எஸ்.எஸ்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !