உள்ளூர் செய்திகள்

எவரெஸ்ட்!

இமயமலையின் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட். அண்டை நாடான நேபாளத்தை சோர்ந்த டென்சிங் நார்கெ, ஐரோப்பிய நாடான நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலார் ஆகியோர் மே, 29, 1953ல் எவரெஸ்ட் சிகரத்தில் உச்சியை அடைந்தனர். நேபாளத்தில் இந்த சிகரம், சாகரமாதா என அழைக்கப்படுகிறது. அண்டை நாடான திபெத்தில் சோமோலுங்மா என்று அழைக்கப்படுகிறது. இதற்கு, உலக அன்னை என்று பொருள்.ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி, முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர், ரீன் ஹோல்ட் மெட்னர். ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்தவர். சிகரத்தை அடைந்த முதல் பெண் ஜீங்கோதாபி. கிழக்காசிய நாடான ஜப்பானை சோர்ந்தவர். மே 15, 1975ல் இந்த சாதனையை படைத்தார். மிக குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பெண் பக்கி டோல்மா.ஹிமாலயம் என்ற சொல்லின் பொருள் பனியின் வீடு. எவரெஸ்ட் என்ற பெயருக்கு சொந்தக்காரர் புவியியல் அறிஞர் ஜார்ஜ் எவரெஸ்ட். இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.- ரா.அருண்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !