பாசிப்பயிறு கிரேவி!
தேவையான பொருட்கள்:பாசிப்பயிறு -- 1 கப்பெரிய வெங்காயம் -- 1தக்காளி -- 2பச்சை மிளகாய் -- 2துருவிய தேங்காய் - அரை கப்இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா, சீரகம், எண்ணெய் - சிறிதளவுமிளகாய்த் துாள், -மஞ்சள் துாள், உப்பு, தண்ணீர், கொத்தமல்லி தழை -- தேவையான அளவு.செய்முறை: பாசிப்பயிறை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், துண்டாக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளியை வதக்கி, மஞ்சள் துாள், மிளகாய்த் துாள், கரம் மசாலா சேர்த்து கிளறவும். பின், வேக வைத்த பாசிப்பயிறு, உப்பு, துருவிய தேங்காய், தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும். கெட்டியானதும் கொத்தமல்லி தழை துாவி இறக்கவும். சத்து மிக்க 'பாசிப்பயிறு கிரேவி' தயார். சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். - க.விஜயா, சிதம்பரம்.