பழங்களின் ராணி!
முக்கனிகளில் ஒன்று மாம்பழம். இது பழங்களின் ராஜா எனப்படுகிறது. பழங்களின் ராணி மங்குஸ்தான். சற்று மங்கலான நிறத்தில் இருக்கும். இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவை உடையது. தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக உடையது. இந்தியாவின் தென்மாநில மலைப்பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம். கண் எரிச்சலை தீர்க்க உதவும். அலர்ஜி சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. உடலை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மங்கலான நிறத்தில் இருந்தாலும் மங்குஸ்தானில் அரிய வகை சத்துக்கள் நிறைந்து உள்ளன. அதனால் தான் இது, 'பழங்களின் ராணி' என அழைக்கப்படுகிறது.- பி.ரோஹித்