வாழைப்பூ பொடி!
தேவையான பொருட்கள்:வாழைப்பூ - 1 கப்துருவிய தேங்காய் - 0.5 கப்எள் - 1 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 3பெருங்காயம், மிளகுத்துாள் - சிறிதளவுஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:வாணலியில் எண்ணெய் சூடானதும், காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு வறுக்கவும். சுத்தம் செய்த வாழைப்பூ, துருவிய தேங்காய், எள் ஆகியவற்றை மிதமான சூட்டில், தனித்தனியாக வதக்கவும். இவை ஆறியதும் உப்பு, மிளகுத்துாள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.சுவையான, 'வாழைப்பூ பொடி!' தயார். சூடான சாதத்தில், நெய்யுடன் கலந்து சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.- எஸ்.விஜயன், கள்ளக்குறிச்சி.