வெண்டைக்காய் துவையல்!
தேவையான பொருட்கள்:வெண்டைக்காய் - 250 கிராம்கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு - தலா 1.5 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 3 தேங்காய் துருவல், புளி - சிறிதளவுஎண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:வாணலியில், எண்ணெய் சூடானதும், வெண்டைக்காயை நன்கு வதக்கவும். கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை தனியாக எண்ணெயில் வறுக்கவும். இவை ஆறியதும் தேங்காய் துருவல், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.சுவைமிக்க, 'வெண்டைக்காய் துவையல்!' தயார். சத்துக்கள் நிறைந்தது. இட்லி, தோசைக்கு, பக்க உணவாக பயன்படுத்தலாம்.- ஞா.இந்திரா, திண்டுக்கல்.