ஸ்டூடன்ட்ஸ் க்ரவுன்!
இந்த சுட்டி மகளின் வயது 6 தான் ஆகிறது. பெயர் வைஷ்ணவி. U.K.G., படிக்கிறாள்; பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சிலர் இன்னும் தமிழைப் படிக்க மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆனால், இவளோ தன் மழலை மொழியில் 650 திருக்குறள்களை அப்படியே ஒப்பிக்கிறாள். முதல் 65 அதிகாரங்களின் நம்பரை கூறினாலே போதும் அந்த அதிகாரத்தின் பெயர் மற்றும் அதிலுள்ள பத்து திருக்குறளையும் அப்படியே ஒப்பிக்கிறாள். மேலும், முதல் வார்த்தையை கூறினால்போதும் முழு குறளையும் கூறுகிறாள். இத்துடன் ஆத்திசூடி, தமிழ் வருடங்கள் 60, இந்திய மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்களையும் கூறுகிறாள். கேட்பதற்கு மிகவும் இன்பமாக உள்ளது. எதிர்காலத்தில் தமிழ்மொழியில் பல சாதனைகளை படைக்க, சிறுவர்மலர் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்!-ஹாட்ஸ் ஆப் வைஷ்ணவி செல்லம்!