உள்ளூர் செய்திகள்

சம்மர் ஸ்பெஷல்! அசத்தும் புதிர்கள்!

1. நீங்கள் ஓர் இருட்டு அறையில் இருக்கிறீர்கள். அந்த அறையில் ஒரு மெழுகுவர்த்தி, ஒரு விறகு அடுப்பு, ஒரு கியாஸ் அடுப்பு ஆகியவை உள்ளன. ஆனால், உங்களிடம் உள்ளதோ ஒரு தீப்பெட்டியில் ஒரே ஒரு தீக்குச்சிதான். எதை முதலில் நீங்கள் பற்ற வைப்பீர்கள்?2. தேவிகா மிருகக்காட்சி சாலைக்கு சென்று வந்தாள். தன் வீட்டின் அருகே உள்ள தோழிகளிடம் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டாள். 36 தலைகளையும், 100 கால்களையும் பார்த்தேன் என்று தேவிகா கூறினாள். அப்படியானால் தேவிகா மிருகக்காட்சி சாலையில் பார்த்த போது இருந்த விலங்குகள் எத்தனை? பறவைகள் எத்தனை?3. அந்த மாங்காய் தோப்பில் உள்ள மாங்காய்கள் வெகு வெகு சுவையாக இருக்கும். சலோமிக்கு அந்த மாங்காய்கள் மீது கொள்ளை ப்ரியம். அந்த தோப்பை சுற்றி 7 வேலிகள் இருந்தன.ஒவ்வொரு வேலிக்கும் ஒரு காவல்காரன் இருந்தான். முதல் காவல்காரனை அணுகிஉள்ளே செல்ல அனுமதி கேட்டாள். நீ கொண்டு வருவதில் பாதியை எனக்கு தருவதாக இருந்தால் உள்ளே செல்ல அனுமதிக்கிறேன் என்றான். சலோமியும் அந்த நிபந்தனைக்கு ஏத்துக் கொண்டாள்.இதே போல் மற்ற 6 காவல்காரர்களும் கேட்க, அவர்களுக்கும் தருவதாக சொல்லி விட்டு தோப்புக்குள் நுழைந்து மாங்காய்களை பறித்தாள். தான் ஒப்பு கொண்டபடியே வரிசையாக ஒவ்வொரு காவல்காரனுக்கும் தன்னிடமுள்ள மாங்காய்களில் சரி பாதியை கொடுத்து கொண்டே வந்தாள். தோட்டத்தை விட்டு வெளியே வந்தபோது அவளிடம் ஒரே ஒரு மாங்காய் மட்டுமே மிச்சம் இருந்தது. இதற்காகவா இத்தனை கஷ்டப்பட்டோம் என்று தன்னையே அவள் நொந்து கொண்டாள். அவள் பறித்த மொத்த மாங்காய்கள் எத்தனை?4. ஒரு குளத்தில் சில மலர்கள் இருந்தன. அவற்றில் தேன் குடிக்க சில வண்டுகள் பறந்து வந்தன. ஒரு பூவில் இரண்டு வண்டுகள் அமர்ந்தால் ஒரு பூ மீதமாகும். ஒரு பூவில் ஒரு வண்டு மட்டும் அமர்ந்தால் ஒரு வண்டு மீதமாகும். அப்படியானால் அந்த குளத்தில் இருந்த மலர்கள் எத்தனை? பறந்து வந்த வண்டுகள் எத்தனை?5. ஒரு பணக்காரர் சிவாவிற்கு, ஒன்பது பிள்ளைகள். புது வருடப்பிறப்பன்று 9 பேருக்கும் ஒரே விதமான 9 வெள்ளி தட்டுகளை பரிசாக வழங்கினார் சிவா. அவை அபூர்வமான வேலைப்பாடு உடையவை. பார்க்கும் போதே, அதன் அழகு கண்ணை பறிக்கும். ஆனால், அவற்றை தயாரித்த பொற்கொல்லர் ஒரு தட்டை மட்டும் எடை குறைவாக செய்து விட்டார். சிறிய வித்தியாசம்தான். பார்த்தால் ஒன்றுக்கொன்று வித்தியாசமே தெரியாது. ஆனால், இது எப்படியோ அந்த பணக்காரர் சிவாவிற்கு தெரிந்துவிட்டது. 9 தட்டுகளில் ஒன்று மட்டும் எடை குறைவாக இருப்பதை அவர் விரும்பவில்லை. எடை குறைவான தட்டை கண்டுப்பபிடிக்கலாம் என்றால் தராசு மட்டுமே இருக்கிறது. எடைக்கல் இல்லை. இருந்தாலும் இரண்டு முறை மட்டுமே தராசை பயன்படுத்தி எடை குறைவான தட்டை கண்டுப்பிடித்து விட்டார் சிவா. எப்படி?6. சரளா வீட்டில் ஒரு தண்ணீர் தொட்டி இருக்கிறது. அதில் பொருத்தியுள்ள குழாய் கொஞ்சம் விசித்திரமானது. மோட்டரை போட்டவுடன் முதல் நிமிடம் கொஞ்சம் தண்ணீர் வரும். இரண்டாவது நிமிடம் அதைப்போல இரண்டு மடங்கு தண்ணீர் வரும். மூன்றாவது நிமிடம் நான்கு தண்ணீர் வரும். நான்காவது நிமிடம் எட்டு மடங்கு தண்ணீர் வரும். இப்படி நிமிடத்துக்கு நிமிடம் தண்ணீரின் அளவு இரட்டித்து கொண்டே போகும். தொட்டி முழுவதும் தண்ணீர் நிரம்ப ஒரு மணி நேரம் ஆகும். அப்படியானால் பாதித்தொட்டி எப்போது நிரம்பும்.7. வினோதி கணக்கில் கெட்டிக்காரி. ஒரு நாள் வகுப்பறையில் அவள் போட்ட கணித புதிருக்கு யாராலும் விடை சொல்ல முடியவில்லை. கடைசியில் கணித நிபுணியான வினோதியின் அம்மா வந்த பின்புதான் அதற்கு விடை கிடைத்தது. அவள் போட்ட புதிர் இதுதான். நான் 45 என்ற எண்ணை நான்காக பிரித்துள்ளேன். அந்த எண்களை ஒன்றன்பின் ஒன்றாக எழுதி கூட்டினால் 45 வரும். அதில் முதல் எண்ணுடன் 2-ஐக் கூட்ட வேண்டும். இரண்டாவது எண்ணிலிருந்து 2-ஐக் கழிக்க வேண்டும். மூன்றாவது எண்ணுடன் 2-ஐக் பெருக்க வேண்டும். நான்காவது எண்ணை 2-ஆல் வகுக்க வேண்டும். ஆனால், இந்த நான்கிற்கும் ஒரே விடைதான் வர வேண்டும். அந்த நான்கு எண்கள் எவை?8. அனிதாவும், ப்ரியாவும் தோழிகள். அடிக்கடி சண்டை போடுவதும்,சமாதானம் ஆவதும் அவர்கள் பழக்கம். ஒரு நாள் இருவரும் தங்களிடம் மிட்டாய் கொண்டு வந்தனர். ''பார்த்தாயா! என்னிடம் எத்தனை இருக்கின்றன?'' என்றார் அனிதா.''ப்பூ இவ்வளவு தானா? உன்னிடமுள்ள மிட்டாய்களில் ஒன்று மட்டும் என்னிடம் வந்தால் இருவரிடமும் ஒரே எண்ணிக்கையிலான மிட்டாய்கள்தான் இருக்கும்,'' என்றாள் ப்ரியா.அவ்வளவுதான் உடனே அனிதாவுக்கு கோபம் வந்துவிட்டது.''என்னை அந்த அளவுக்கா மட்டமாக நினைத்து விட்டாய்? உன் மிட்டாய்களில் ஒன்று மட்டும் என்னிடம் வந்து விட்டால், நீ வைத்திருப்பதை போல் இரண்டு மடங்கு மிட்டாய்கள் என்னிடம் இருக்கும்,''என்றாள் அனிதா.அப்படியானால் அவர்கள் இருவரிடம் எத்தனை எத்தனை மிட்டாய்கள் இருந்தன?அசத்தும் புதிருக்கான விடைகள்:<1. வேறெதை, தீக்குச்சியை தான்!2. 22 பறவைகள், 14 விலங்குகள்.3. 128 மாங்காய்கள்4. 4 வண்டு, 3 பூ5. தராசின் ஒவ்வொரு தட்டிலும் தலா 3 தட்டுகளை வைத்து நிறுத்தி பார்க்க வேண்டும். இரண்டு சமமாக இருந்தால். மீதம் உள்ள 3 தட்டுகளில் தான் குறைபாடு உள்ளது என தெரிய வரும். அப்படி இல்லாமல் ஒரு பக்கம் உயர்ந்ததும், மற்றொரு பக்கம் தாழ்த்தும் இருந்தால், தாழ்ந்த பக்கத்தில் உள்ள தட்டுகளில் ஒன்றுதான் எடை குறைவாக உள்ளது என தெரிந்து கொள்ளலாம். உடனே எடை குறைந்த பக்கத்தில் உள்ள 3 தட்டுகளில் இரண்டை தராசின் இரண்டு பக்கமும் வைக்க வேண்டும். எடை சமமாக இருந்தால் கீழே உள்ள தட்டு எடை குறைந்தது என்று கண்டுப்பிடித்து விடலாம். அப்படியின்றி, இரண்டு பக்கமும் சமமாக இல்லாமல் எந்த பக்கம் தட்டு உயர்ந்து நிற்கிறதோ, அந்த பக்கம் உள்ள தட்டுதான் எடை குறைவானதாகும்.6. 59-வது நிமிடத்தில் தொட்டி பாதி அளவுக்கு நிரம்பி இருக்கும்.7. 8+2=1012-2=105x2=1020 வகுத்தல் 2=10458. அனிதாவிடம் 7 மிட்டாய்களும், ப்ரியாவிடம் 5 மிட்டாய்களும் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !