உள்ளூர் செய்திகள்

பொம்மை கலைமான்கள்!

தேவைப்படும் பொருட்கள்!: பிளேட், பென்சில், அட்டை (அல்லது) கனமான பேப்பர், சிசர்ஸ், ஸ்டாப்ளர், கருப்பு பேப்பர், க்ளூ, ஸ்டிக்கர் கண்கள், சிகப்பு கலர் ஸ்பாஞ்ச்.இப்போது செய்யலாமா?* அட்டையை ஒரு பிளேட்டில் வைத்து அழகாக அரை வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.* இப்போது இந்த அரை வட்ட அட்டையை, 'கோன்' வடிவமாக்கி ஸ்டாப்ளர் பின் அடிக்கவும்.* கருப்பு கலர் பேப்பரை படத்தில் காட்டியுள்ள வடிவத்தில் அழகாக கட் செய்து மேல்பகுதியில் 'க்ளு'வை பயன்படுத்தி ஒட்டவும்.* 'ஸ்டிக்கர்' கண்களை இப்போது முன் பகுதியில் அழகாக ஒட்டவும்.* மூக்கை உருவாக்க சிகப்பு கலர் 'ஸ்பான்ஞ்சை' வட்டமாக வெட்டி அழகாக ஒட்டவும்.இப்போ... கோன் கலைமான் ரெடியா? பெருமையா எல்லார்கிட்டயும் காட்டுங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !